துணிவு vs வாரிசு… கலைகட்டிய சோஷியல் மீடியா… இதுவரை ஒன்றாக வெளியான அஜித் விஜய் படங்கள்!

Photo of author

By Vinoth

துணிவு vs வாரிசு… கலைகட்டிய சோஷியல் மீடியா… இதுவரை ஒன்றாக வெளியான அஜித் விஜய் படங்கள்!

Vinoth

துணிவு vs வாரிசு… கலைகட்டிய சோஷியல் மீடியா… இதுவரை ஒன்றாக வெளியான அஜித் விஜய் படங்கள்!

அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவரும் நடித்து வரும் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக  இணைந்துள்ள இந்த படத்துக்கு தற்காலிகமாக ‘AK 61’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. படத்தில் மஞ்சு வாரியர் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பீஸ்ட் தோல்விக்குப் பிறகு விஜய்யின் வாரிசு திரைப்படம், திட்டமிட்டது போல சென்றுகொண்டிருக்கிறது. முதல் லுக் போஸ்டரின் போதே 2023 பொங்கல் வெளியீடு என அறிவித்து விட்டனர். இதனால் விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாக ரிலீஸ் ஆக உள்ளன.

இந்நிலையில் இதுவரையில் இவர்கள் படங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதைப் பற்றி பார்ப்போம்.

  • 2001 ஆம் ஆண்டு – விஜய்யின் ப்ரண்ட்ஸ் vs அஜித்தின் தீனா
  • 2003 ஆம் ஆண்டு – அஜித்தின் ஆஞ்சநேயா vs விஜய்யின் திருமலை
  • 2006 ஆம் ஆண்டு – அஜித்தின் பரமசிவன் vs விஜய்யின் ஆதி
  • 2007 ஆம் ஆண்டு – விஜய்யின் போக்கிரி vs அஜித்தின் ஆழ்வார்
  • 2014 ஆம் ஆண்டு – அஜித்தின் வீரம் vs விஜய்யின் ஜில்லா
  • 2023 ஆம் ஆண்டு – அஜித்தின் துணிவு vs விஜய்யின் வாரிசு