கொரோனா தொற்று அதிகரிப்பு! மீண்டும் ஊரடங்கு அமல்!

Photo of author

By Parthipan K

கொரோனா தொற்று அதிகரிப்பு! மீண்டும் ஊரடங்கு அமல்!

Parthipan K

corona-infection-increase-curfew-again

கொரோனா தொற்று அதிகரிப்பு! மீண்டும் ஊரடங்கு அமல்!

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் அதிக அளவில் இருந்தது அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். அந்த கொரோனா பரவலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகளவில் பாதிப்படைந்தனர்.பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் மீண்டும் கொரோனா படையெடுக்க தொடங்கியுள்ளது.சீனாவில் ஷாங்காய் நகரில் கொரோனா அதிகரித்து வருகின்றது.கொரோனா தொற்று பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிகள் ,பொழுதுபோக்கு அரங்குகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் முடப்பட்டுள்ளது.

மேலும் நகருக்குள் வருபவர்கள் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டால் தனிமைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் நடப்டாண்டின் தொடக்கத்திலேயே பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் தொற்று பரவல் அதிகரிப்பது மக்கள் அச்சம் அடைத்து வருகின்றனர்.மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.