நிதியமைச்சர் திடீர் நீக்கம்! வெளியான அதிரடி அறிவிப்பு

0
156
Suspended
Suspended

நிதியமைச்சர் திடீர் நீக்கம்! வெளியான அதிரடி அறிவிப்பு

இங்கிலாந்து நிதி அமைச்சர் குவாஸி குவார்டங்கை அந்த பதவியிலிருந்து அதிரடியாக நீக்கி பிரதமர் லிஸ் டிரஸ் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தின் புதிய பிரதமராக லிஸ் டிரஸ் பதவி வகித்து வருகிறார். இவர் கடந்த மாதம் வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டார். கடந்த மாதம் மினி பட்ஜெட்டில் வரி குறைப்பு அறிவிக்கப்பட்டது. கடன் வாங்கி இதை சரிக்கட்டலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, பிரதமரின் இத்திட்டத்திற்கு சொந்தக் கட்சி எம்.பி.க்கள் சிலர் அதிருப்தி தெரிவித்தனர். நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது. இதனை பிரதமர் மறுபரிசீலனை செய்யவேண்டும் என கருத்து தெரிவித்தது பிரதமர் லிஸ் டிரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

இங்கிலாந்து நிதி மந்திரி அதிரடி நீக்கம்... புதிய மந்திரியை நியமித்தார் லிஸ் டிரஸ்

இந்நிலையில், இங்கிலாந்து நிதி அமைச்சர் குவாஸி குவார்டங்கை அந்த பதவியிலிருந்து அதிரடியாக நீக்கி பிரதமர் லிஸ் டிரஸ் உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், புதிய நிதி அமைச்சராக ஜெர்மி ஹன்ட் என்பவரை நியமித்து செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

Previous articleசுவாசக்குழாய் அடைப்பை தடுக்க உதவும் எளிமையான வைத்தியம்
Next articleநிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்து! 22 பேர் பலியான சோக சம்பவம்