வங்கி ஊழியர் சங்கங்களின் கோரிக்கை! இனி இந்த இரண்டு நாட்களும் வங்கி விடுமுறை?

0
232
the-demand-of-bank-employees-unions-now-these-two-days-are-bank-holidays
the-demand-of-bank-employees-unions-now-these-two-days-are-bank-holidays

வங்கி ஊழியர் சங்கங்களின் கோரிக்கை! இனி இந்த இரண்டு நாட்களும் வங்கி விடுமுறை?

நாடு முழுவதும் கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது.அதனையடுத்து  மூன்றாவது சனிக்கிழமை அன்று வங்கிகள் அனைத்தும் அரைநாள் மட்டும் செயல்பட்டு வருகின்றது.இந்நிலையில் அனைத்து சனிக்கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என வங்கி ஊழியர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் வங்கி ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.அந்த பேச்சுவார்த்தையில் அனைத்து சனிக்கிழமையிலும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது என கூறப்படுகின்றது.மேலும் இந்த விடுமுறைக்கு பதிலாக வார நாட்களில் வேலை நேரத்தில் ஒரு மணி நேரம் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த தகவலின் மூலம் வங்கிகளுக்கு அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று வழக்கம் போல் விடுமுறை தான் தற்போது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் சேர்த்து இரு தினங்கள் விடுமுறை வரும் என வங்கி ஊழியர்கள் மகிழ்ச்சியில் எதிர்பார்துகொண்டிருகின்றனர்.

Previous articleஇக்கட்டான சூழ்நிலையில்தான் கடமை காத்து கண்ணியத்துடன் செயல்பட வேண்டும்! தொண்டர்களுக்கு அண்ணாமலை அறிவுரை!
Next articleஉதயநிதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்! இந்தி திணிப்பு கூடாது?