மாமனிதனை போற்றும் நாள் இன்று! அப்துல் கலாம் பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்!

Photo of author

By Parthipan K

மாமனிதனை போற்றும் நாள் இன்று! அப்துல் கலாம் பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்!

Parthipan K

today-is-the-day-to-honor-the-great-man-interesting-information-about-abdul-kalam-that-you-did-not-know

மாமனிதனை போற்றும் நாள் இன்று! அப்துல் கலாம் பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்!

இன்று அப்துல் கலாம் பிறந்த நாள் இன்று.மாணவர் தினமாக கொண்டாடப்படுகின்றது.மேலும் அவருடைய வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான உண்மைகளை பற்றி காணலாம்.அப்துல் கலாம் ஒரு முறை மேடையில் பேசிக்கொண்டிருந்தார்.அப்போது மின் நிறுத்தம் ஏற்ப்பட்டது.அப்போது சிறிதும் யோசிக்காமல் உடனடியாக மேடையிலிருந்து கீழே இறங்கி வந்தார்.அப்போது கீழே சுமார் 400 மாணவர்கள் நின்று கொண்டிருந்தனர் அவர்களின் நடுவில் வந்து நின்று கொண்டு அவருடைய கனத்த குரலைக் கொண்டு உரையை தொடங்கினார்.

மேலும் அப்துல் கலாம் அவர்கள் அவருடைய வாழ்நாள் சேமிப்பு மற்றும் அவரின் சம்பளம் ஆகிய அனைத்தையும் பூரா என்ற தொண்டு நிறுவனத்திற்கு வழங்கி வந்தார். மேலும் அவர் தனக்கென எதுவும் சேமித்து வைக்கவில்லை.தனக்கு வரும் அனைத்து வாழ்த்து மடல்கள் ,பரிசு மற்றும் கடிதங்கள் அனைத்திற்கும் அவரே அவருடைய கைப்பட பதில் எழுதிய நன்றி கடிதத்தை அனுப்புவதை வழக்கமாக கொண்டவர்.

மேலும் இவர் குழந்தைகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர் ஒரு நாள் ஒரு பள்ளியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள அந்த பள்ளிக்கு சென்றார் அங்குள்ள குழந்தைகள் அனைவரும் இவருடன் புகைபடம் எடுத்துக்கொண்டிருந்தனர்.அப்போது நிகழ்ச்சி தொடங்கும் நேரம் ஆனது ஆனால் இவர் குழந்தைகள் அனைவரும் அவருடன் நின்று புகைப்படம் எடுத்து முடித்த பிறகே மேடைக்கு சென்றார் என குறிப்பிடப்பட்டுள்ளது.