போக்குவரத்திற்கு தடை: திடீரென ஏற்பட்ட நீர்வீழ்ச்சி! சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு…!

0
251

போக்குவரத்திற்கு தடை: திடீரென ஏற்பட்ட நீர்வீழ்ச்சி!சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு…!

தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் திடீரென அருவி போல் நீர் சாலைகளில் கொட்டியது, இதனால் போக்குவரத்து தடைப்பட்டது.
போக்குவரத்திற்கு தடை: திடீரென ஏற்பட்ட நீர்வீழ்ச்சி! சாலைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு...!

தேனி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் மதுரையிலிருந்து மூணாறு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போடிமெட்டு மலைப்பகுதியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மழை நீரானது அருவி போல் கொட்டி சாலை எங்கும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த சாலையை நாள்தோறும் ஆயிரத்திற்கு மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் ஜீப்புகள் மூலமாகவும், நடந்தும் ஏலத் தோட்டங்கள் மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு வேலைக்குச் சென்று திரும்புகிறார்கள். திடீரென ஏற்பட்ட நீர்வீழ்ச்சியால் வேலைக்கு சென்று திரும்பி வந்த கூலி தொழிலாளர்களின் ஜீப்புகள் வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்டது. திடீரென ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு குறித்து முந்தல் பகுதி காவல்துறையினரிடம் தகவல் அளித்துள்ளனர். இந்த பிரச்சனையின் தீவிர அறிந்த காவல்துறையினர் உடனடியாக போடிமெட்டு மலைச்சாலையில் போக்குவரத்திற்கு தடை விதித்தனர். தமிழகம் நோக்கி வந்த வாகனங்கள் போடிமெட்டு சோதனை சாவடிகளும், கேரளா நோக்கி சென்ற வாகனங்கள் முந்தல் பகுதியில் உள்ள சோதனை சாவடிகளும் தடுத்து நிறுத்தப்பட்டன.

இந்த திடீர் வெள்ளப்பெருக்கால் போடி -மூணாறு தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இந்த சாலைகளில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பதை கண்டறிந்த பின்னரே போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என காவல்துறையின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleமக்களே உஷார்! ஆறு மாவட்டங்களில் மட்டும் மிக கனமழைக்கு வாய்ப்பு!
Next articleதீபாவளியை முன்னிட்டு இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here