பால் உற்பத்தியாளர்களுக்கு குட் நியூஸ்! ஆவின் வெளியிட்ட புதிய தகவல்!
தீபாவளி பண்டிகை வர இருப்பதையொட்டி அரசு ஊழியர்கள் அனைவருக்கும் போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கும் போனஸ் வழங்குவது குறித்து உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்த தற்போது ஆவின் பாலகத்தில் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.இதனால் அங்கு உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதாக தெரிவித்துள்ளனர். இந்த ஊக்கத்தொகை குறித்து மதுரை மண்டல ஆவின் பொது மேலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மதுரையில் உள்ள ஆவின் கடந்த நிதியாண்டில் மட்டும் இரண்டு லட்சத்து 750 லிட்டர் வரை பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இதில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மீதம் விற்பனை செய்யப்பட்டவை பால் சம்பந்தப்பட்ட பொருட்களாகும். இவ்வாறு விற்பனை செய்யப்பட்டதில் 13 கோடி ரூபாய் லாபம் வந்துள்ளது.மேலும் மதுரையில் 700 க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் உள்ளது.இதில் 38ஆயிரத்திற்கு மேல் உறுப்பினர்களாக உள்ளனர்.இவர்கள் மாட்டுத்தீவனம் உள்ளிட்டவை விலை அதிகரிப்பால் இவர்களுக்கு கொடுத்து வந்த பாலுக்கான தொகை போதுமானதாக இல்லை.
இதனால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்க தொகையாக மூன்று புள்ளி 75 கோடி வழங்குவதாக தெரிவித்துள்ளனர். பால் உற்பத்தியாளர்கள் கொடுத்த பாலுக்கு லிட்டர் 50 பைசா வீதம் மொத்தம் 3.75 கோடி வழங்க உத்தரவிட்டனர். தற்பொழுது லாபத்திலிருந்து உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க உத்தரவிட்டு உள்ளனர். இந்த ஊக்கத்தொகையால் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் பயனடைவர்.