20 ஆண்டுகளாக பதவியில் இருந்து அசைக்க முடியாத தலைவர்?

0
181

அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாகவும் இந்தியாவின் நெருங்கிய நணபனில் ஒரு நாடாக திகழ்வது ரஷ்யா. அந்த நாட்டின் சக்தி வாய்ந்த தலைவரில் ஒருவராக திகழ்பவர் அந்த நாட்டின் அதிபரான விளாடிமிர் புதின்.

1999-ம் ஆண்டு சோவியத் யூனியனின் உளவு அமைப்பில் விளாடிமிர் புதின் பணியாற்றி கொண்டு இருந்த புடின் அந்த ஆண்டு ரஷ்யாவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது.அப்போது ரஷ்ய அதிபராக இருந்த போரிஸ் எல்ட்சின், பொறுப்பு(துணை) பிரதமராக புதினை நியமனம் செய்தார்.

அதன்பின் புதினுக்கு அதிபர் பொறுப்பை போரிஸ் எல்ட்சின் 1999-ம் ஆண்டு டிசம்பர் 31-ந்தேதி விட்டு கொடுத்து விட்டு அவர் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

அன்றுமுதல் 20 ஆண்டுகளாக புதின் ரஷ்யாவில் அதிபர் அல்லது பிரதமர் ஆகிய 2 பதவிகளில் ஏதாவது ஒன்றை வகித்தபடி தன்னை அரசியலில் நிலை நிறுத்தி வந்துகொண்டிருக்கிறார்.

1999 ஆண்டு கிளர்ச்சியாளர்களுக்கு வான்வழி தாக்குதல் கொடுத்தது. பல்வேறு விவகாரத்தில் அமெரிக்காவிடம் மல்லுக்கட்டுவது போன்றவற்றில். தன் வலிமையை நிரூபித்து கொண்டு இருக்கிறார்.

கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் புதின் அபாரவெற்றி பெற்றார். அவர் 2022-ம் ஆண்டு வரை அதிபராக நீடிப்பார். ரஷ்ய நாட்டு அரசாங்கத்தை தனது கை விரல் நுனியில் வைத்திருக்கும் புதின் இன்று தனது அரசியல் வாழ்க்கை பயணத்தின் 21-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.

மேலும் தொடர்ந்து 20 ஆண்டுகளாக அதிபர் அல்லது பிரதமர் பதவிகளில் நீடித்து எதிர்க்கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறார்.

Previous articleசென்னை மக்களை அச்சுறுத்தும் பிரச்சனையில் தமிழக அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் வழங்கிய ஆலோசனை
Next articleதிமுகவிற்கு எதிராக CAAக்கு ஆதரவாக செயல்பட நினைத்து அசிங்கப்பட்ட பாஜக