அஜித் ரசிகர்களுக்கு ஏற்பட்ட ஷாக்! இனி எந்த படத்திலும் நடிக்க போவதில்லை!

0
213
shock-for-ajith-fans-will-not-act-in-any-film
shock-for-ajith-fans-will-not-act-in-any-film

அஜித் ரசிகர்களுக்கு ஏற்பட்ட ஷாக்! இனி எந்த படத்திலும் நடிக்க போவதில்லை!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் பருபவர் அஜித். இவர் நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்த படம் வருகிற பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகின்றது. துணிவு படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்  நடிக்க உள்ள திரைப்படம் ஏகே 62. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றது.இந்த படத்திற்கு  அனிருத் இசையமைக்கின்றார். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார்.

இந்நிலையில் அஜித்  ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சி  கொடுக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த தகவலின்  ஏகே 62 திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு நடிகர் அஜித் 62 நாடுகளுக்கு உலகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அதனால் அடுத்த 18 மாதங்கள் எந்த ஒரு படத்தின் படப்பிடிப்பிலும் அஜித் பங்கேற்றுக்கொள்ள மாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன்முலம் ஏகே 62 படத்திற்கு பிறகு பெரிய இடைவேளைக்கு பின் தான் அஜித் நடிப்பார் என கூறப்படுகின்றது.இந்த தகவல் அனைவருக்கும் சற்று ஷாக் கொடுத்துள்ளது.

Previous articleசிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்ட தொழிலாளி! கிடுக்குப் பிடி போட்டு பிடித்த போலீசார்!
Next articleவசமாக சிக்கிய செல்போன் திருடர்கள்! தர்ம அடி கொடுத்த போலீசார்!