உயர்ந்தது ரயில் கட்டணம் !!!

0
168

ரயில் கட்டணம் நேற்று திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த கட்டண உயர்வு தொடர்பாக  ரயில்வே  நிர்வாகம்  நேற்று  இரவு வெளியிட்டுள்ள  அறிக்கையில்  “குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண ரயில்களுக்கான கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது . மெயில் மற்றும் விரைவு ரயில்களில் குளிர்சாதன வசதி இல்லாத படுக்கை வசதியுடன் கூடிய வகுப்பிற்கான கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு இரண்டு பைசா உயர்த்தப்பட்டுள்ளது . குளிர்சாதன வசதியுடன் கூடிய கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு  நான்கு பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. சதாப்தி, ராஜதானி, துரோந்தோ, உள்ளிட்ட சொகுசு ரயில்களுக்கும் நான்கு பைசா உயர்த்தப்பட்டுள்ளது. முன்பதிவு கட்டணம் மற்றும் அதிவிரைவு கட்டணங்களில் மாற்றம் செய்யப்படவில்லை.

Previous articleபுத்தாண்டில் மாஸ் காட்ட போகும் 4 ராசிக்காரர்கள் !!! 2020 புத்தாண்டு ராசிபலன்.
Next articleமேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும்?