போலீஸ்க்கு திமுக கொடுத்த பவர்! “இனி இபிஎஸ்-ஐ பார்க்க முடியாது” ஜி.கே வாசனுக்கு வந்த சோதனை!
அதிமுக இரு அணிகளாக பிரிந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஓ பன்னீர் செல்வத்தை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்தார். அதனையடுத்து அவரின் இடத்திற்கு உதயகுமார் அவர்களை நியமித்தார். நடைபெறப்போகும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இடத்திற்கு உதயகுமார் அவர்களை அமர்த்த வேண்டும் என சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதினார். இவரைப் போலவே ஓ பன்னீர்செல்வ தரப்பினரும் கடிதம் எழுதினர். சபாநாயகர் அப்பாவும் நீதிமன்றத்தில் வரும் உத்தரவின்படி செயல்படுவேன் என தெரிவித்தார்.
நேற்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இடத்திற்கு ஓ பன்னீர்செல்வம் அமர்த்தப்பட்டனர். இதனை எதிர்த்து எடப்பாடி அணியினர் சபாநாயகர் அப்பாவு முன்னிலையிலேயே உடனடியாக தர்ணாவில் ஈடுபட்டனர். மேலும் அவையை கலக்கம் செய்யும் எம் எல் ஏக்களை வெளியேற்றும் படி அப்பாவு உத்தரவிட்டார். அதனையடுத்து எடப்பாடி அணியும் சட்டப்பேரவை கூட்டுத்தொடரை புறக்கணித்தது. இன்று உண்ணாவிரத போராட்டம் நாளை நடத்தப் போவதாக நேற்றே அறிவிப்பை வெளியிட்டனர்.
அந்த வகையில் இன்று கருப்பு சட்டை அணிந்து அதிமுக முன்னாள் முதல்வர் உட்பட எம்எல்ஏக்கள் அனைவரும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் அனைவரையும் கைது செய்தனர். தற்பொழுது கைது செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமியை காண ஜிகே வாசன் சென்றுள்ளார். ஆனால் அங்கிருந்த போலீசார் அவரை, எடப்பாடி பழனிச்சாமியை பார்ப்பதற்கு அனுமதிக்கவில்லை. உடனடியாக ஜி கே வாசன் சாலை மறியலில் ஈடுபட்டார். அமைதியான முறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய பொழுது இவ்வாறு கைது செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார்.