இனி பியூட்டி பார்லர் தேவையில்லை!! இந்த ஒரு காபி பவுடர் போதும் முகம் ஜொலிக்க!!

0
151

இனி பியூட்டி பார்லர் தேவையில்லை!! இந்த ஒரு காபி பவுடர் போதும் முகம் ஜொலிக்க!!

காபி பொடியை நாம் பாலில் கலந்து புத்துணர்வு தரும் பானமாக தான் அருந்தி இருப்போம். ஆனால் இது முகத்திற்கும் நல்ல மருந்து. காபி பொடி இருந்தால் போதும் இனி பியூட்டி பார்லர் போக தேவையில்லை. வீட்டிலேயே இதனை செய்து உங்கள் முகத்தை பளபளக்க செய்யலாம்.

தேவையான பொருட்கள்:

பால், தேன் ,தயிர் ,எலுமிச்சை, மஞ்சள் ,கற்றாழை

காபித்தூளை எடுத்து இதில் ஏதேனும் ஒரு பொருளில் கலந்து ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம். முகம் பளபளப்பாக இது உதவும்.

அதிக நேரம் கணினியில் வேலை செய்பவர்களுக்கு கண்கள் வீங்கி நிலையில் காணப்படும். அவ்வாறு இருப்பவர்கள் அரைத்த காபி கொட்டையை வெதுவெதுப்பான நீரில் கலந்து கொள்ள வேண்டும். பிறகு சிறிதளவு காட்டனை எடுத்து கலந்து வைத்துள்ள கலவையில் முக்கி வீக்கம் உள்ள பகுதியில் தடவி வர நல்ல மாற்றத்தை காணலாம்.

குறிப்பாக செல்போன் மற்றும் லேப்டாப் என உபயோகம் செய்பவர்களுக்கு கருவளையம் உண்டாகுவது. இந்த கருவளையத்தை போக்குவதற்காக பலவற்றை முயற்சி செய்திருப்பர். ஆனால் இது ஒரு முறை பயன்படுத்தினால் போதும் கருவளையம் காணாமல் போய்விடும். அரை ஸ்பூன் காபி தூளுடன் ஒரு ஸ்பூன் சுத்தமான தேனை கலக்க வேண்டும். இவ்வாறு கலந்ததை கருவளையம் உள்ள இடத்தில் போடவும். 10 முதல் 15 நிமிடம் காய விட்டு பின்னர் குனிந்த நேரத்தில் கழுவி வர வேண்டும். இதேபோல் தொடர்ந்து செய்து வர கருவளையம் பிரச்சினை குணமடையும்.

அதேபோல முகப்பரு உள்ளவர்கள், காபி தூளை உங்கள் முகத்தில் தைக்கலாம். அவ்வாறு தேய்க்கும் பொழுது மென்மையை அவர் தேய்க்க வேண்டும். காப்பி பொடியில் இருக்கையாகவே கெட்ட பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உடையது. அதனால் சருமத்தில் முகப்பரு வருவதை தடுக்க உதவும் மிகவும் பொலிவாக காணப்படும்.

நீங்கள் திடீரென்று ஏதேனும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நினைத்தால் இந்த ஃபேஸ் பேக்கை போட்டு செல்லலாம்.

சிறிதளவு கடலை மாவுடன் மூன்று டேபிள்ஸ்பூன் காபி பவுடரை சேர்க்க வேண்டும். அதனுடன் மூன்று டீஸ்பூன் தேன் மற்றும் இரண்டு டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்க்க வேண்டும். இதனை ஒரு பேஸ்ட்டாக நன்று கலக்கி முகத்தில் தேய்த்து வர முகம் ஜொலி ஜொலிப்பாக இருப்பதை காணலாம்.