தீபாவளி முன்னிட்டு திரையரங்குகளில் டிக்கெட் விலை உயர்வு!! அதிர்ச்சியில் திரைப்பட ரசிகர்கள்!!

0
170
Ticket prices hiked in theaters ahead of Diwali!! Film fans in shock!!
Ticket prices hiked in theaters ahead of Diwali!! Film fans in shock!!

தீபாவளி முன்னிட்டு திரையரங்குகளில் டிக்கெட் விலை உயர்வு!! அதிர்ச்சியில் திரைப்பட ரசிகர்கள்!!

தமிழகத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில் டிக்கெட் விலையை திடீரென உயர்த்தி உள்ளனர். தமிழகத்தில் இயங்கும் மல்டிபிளக்ஸ் மற்றும் சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர் ஆகியவற்றிற்கு ஏற்ப டிக்கெட் கட்டணங்களில் சிறிதளவு மாறுபாடு இருந்தது. ஆனால் தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு அனைத்து சினிமா திரையரங்குகளிலும் டிக்கெட் விலை உயர்ந்துள்ளது.இவ்வாறு டிக்கெட் விலை உயர்வு குறித்து தமிழக அரசு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

தற்பொழுது இது சினிமா பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்பொழுது வரை மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் ரூ 160 ரூபாய் மட்டுமே கட்டணமாக இருந்து வந்தது. தற்பொழுது 190 ஆக மாற்றியுள்ளனர். அதேபோல தனி ஸ்கிரீன் உள்ள திரையரங்குகளில் 130 ரூபாய் இருந்த டிக்கெட் விலையானது , மல்டிபிளக்ஸ் போலவே 190 எனும் மாற்றியுள்ளனர். திரையரங்குகளுக்கு ஏற்ப மாறுபட்டு இருந்த கட்டணம் தற்பொழுது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என அனைத்து இடங்களிலும் ஒன்று போலவே உள்ளது.

அதேபோல ஃபர்ஸ்ட் கிளாஸ், செகண்ட் கிளாஸ், தேர்ட் கிளாஸ் என்ற வகையில் டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கும்.தற்பொழுது நீங்கள் தேர்ட் கிளாஸ் டிக்கெட் வாங்க நினைத்தாலும் கூட ரூ. 190 கொடுக்க வேண்டும். சமீபகாலமாகவே பெரிய நடிகர்களின் படங்கள் திரைக்கு வரும் பொழுது அனைவருக்கும் ஒரே மாதிரியான கட்டணம் தான் வசூலிக்கப்பட்டு வந்தது.

தற்பொழுது தீபாவளி பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு மீண்டும் அனைவருக்கும் ஒரே கட்டணத்தை நிர்ணயித்துள்ளனர். இதனை தமிழக அரசு பார்த்தும் கண்டுகொள்ளாமல் இருப்பது மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் திரைக்கு வரும் ஒன்று இரண்டு படங்களை தவிர்த்து, அனைத்து படங்களும் உதயநிதியின் தயாரிப்பு நிறுவனம் தான் வெளியிடுகிறது. இவர்கள் வெளியிடுவதால் கட்டணத்தை மாற்றி அமைத்து கண்டும் காணமல் உள்ளனரா? அதனால் தான் நடவடிக்கை எடுப்பதில்லையா என சந்தேகிக்கின்றனர்.

Previous articleதங்கமணியின் கோட்டையை தகர்த்த பன்னீர்செல்வம்!
Next articleதிரையரங்குகளில் சிறப்பு காட்சி! ஒரு வாரத்திற்கு மட்டுமே அனுமதி!