21-10-2022- இன்றைய ராசி பலன்கள்!

0
254

மேஷம்

இன்று தங்களுக்கு சீரான நாளாக இருக்கும். அலுவலகத்தில் தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்து முடிப்பதற்கு திட்டமிட்டு செயல்பட வேண்டும். விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். மனைவியிடம் அனுசரித்து செல்ல வேண்டும். நிதிநிலை நடுநிலையுடன் இருக்கும். இன்று தாங்கள் இறைவனை வழிபடுவது மன அமைதியை வழங்கும்.

ரிஷபம்

இன்று தாங்கள் எந்த செயலையும் பதட்டம் இல்லாமல் பொறுமையுடன் செய்ய வேண்டும். அலுவலகத்தில் பணிகளை திட்டமிட்டு கவனத்துடன் செய்ய வேண்டும். கணவன், மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பண வரவு சற்றே குறைவாக இருக்கும்.

மிதுனம்

இன்று தங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் பணிகளை சிறப்பாக செய்து முடித்து வெற்றியடைவீர்கள். அதன் மூலமாக புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கணவன், மனைவியிடையே மகிழ்ச்சியை அதிகரிக்கும். பண வரவு தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு போதுமானதாக இருக்கும்.

கடகம்

இன்று தங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. ஆகவே நீங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். தங்களுடைய பணிகளை செய்யும் போது கவனத்துடன் செயல்பட வேண்டும். துணையுடன் பேசும் போது வார்த்தைகளை விடாமல் இருப்பது மிகவும் நன்று. நிதிநிலை குறைவாக உள்ளதால் தேவையற்ற தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.

சிம்மம்

இன்று தங்களுக்கு மிதமான நாளாக இருக்கும். அலுவலகத்தில் தங்களுடைய பணிகளும், பொறுப்புகளும் அதிகரிப்பதால் திட்டமிட்டு செயல்படுவதன் மூலமாக வெற்றியடைய முடியும். மனைவியிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பணவரவு நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இருக்காது. வரவு, செலவு இரண்டுமே கலந்து காணப்படும்.

கன்னி

இன்று தங்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு நற்பலன்கள் இருக்காது. பணிகளை செய்யும்போது கவனமாக இருப்பதைப் போல தோன்றலாம். ஆகவே திட்டமிட்டு செயல்பட வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற இயலும். கணவன், மனைவி இடையே அனுசரித்து செல்வது மிகவும் நன்று. நிதிநிலை நிலமாக இருக்கும். ஆகவே பண விஷயத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும்.

துலாம்

இன்று தங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்து வளர்ச்சி அடைவீர்கள். ஆகவே புதிய வேலைவாய்ப்பு கிடைக்கும். மனைவியுடன் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

விருச்சிகம்

இன்று தங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் எடுத்து அதில் லாபமடைவீர்கள். அலுவலகத்தில் பணிகளை சரியான நேரத்தில் செய்து முடித்து பாராட்டுக்களை பெறுவீர்கள். கணவன், மனைவியிடையே புரிதல்கள் அதிகரிக்கும். பண வரவு சிறப்பாக காணப்படும்.

தனுசு

இன்று தங்களுக்கு சீரான நாளாக இருக்கும். நீங்கள் செய்யும். பணிகளை கடினமாக நினைக்காமல் திட்டமிட்டு செயல்பட வேண்டும். மனைவியிடம் உணர்ச்சிவசப்படாமல் அமைதியான முறையில் பேசுவது நல்லது. பணவரவு குறைவாக இருக்கும். செலவுகள் சற்றே அதிகரிக்க கூடிய நாளாக இன்றைய நாள் விளங்கும்.

மகரம்

இன்று தாங்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். நீங்கள் பணிகளை சிறப்பாக செய்து முடித்தாலும் அதில் வளர்ச்சி இல்லாததை போல உணர்வீர்கள். கணவன், மனைவியிடையே புரிதல் அதிகரிக்கும். நிதிநிலை நடுநிலையுடன் காணப்படும்.

கும்பம்

இன்று தங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். சரியான நேரத்தில் தங்களுடைய பணிகளை சிறப்பாக செய்து முடித்து அதில் நல்ல வளர்ச்சி காண்பீர்கள். கணவன், மனைவியிடம் ஒற்றுமையை அதிகரித்து சந்தோஷம் கூடும். பணவரவு அதிகரிக்கும்.

மீனம்

இன்று தங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் மேற்கொள்ள உகந்த நாள். பணிகளை சிறப்பாக செய்து முடித்து மேலதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். மனைவியிடம் மகிழ்ச்சிக்கான அணுகு முறையில் உரையாற்றுவீர்கள். நிதிநிலை சிறப்பாக இருக்கும்.

Previous articleஜப்பான் நாட்டில் நாளை வெளியாகும் ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர்!
Next articleஇதை செய்தால் இனி குறட்டை வராது! உடனே ட்ரை பண்ணுங்க!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here