இதை செய்தால் இனி குறட்டை வராது! உடனே ட்ரை பண்ணுங்க!

0
95

இதை செய்தால் இனி குறட்டை வராது! உடனே ட்ரை பண்ணுங்க!

தூங்கும் பொழுது பக்கத்தில் இருப்பவர்கள் குறட்டை விட்டால் அசந்து தூங்குபவர்கள் கூட சில நேரம் எழுந்து விடுவர். தூங்கும் நேரத்தில் மூக்கின் நாசி மற்றும் தொண்டை வழியாக மாறி மாறி சுவாசிக்கும் பொழுது குறட்டை உண்டாகும். முறையாக சுவாசம் செய்யாமல் இவ்வாறு தொண்டையில் ஏற்படும் காரணங்களால் தான் குறட்டையின் சத்தம் அதிகமாகிறது. அதுமட்டுமின்றி குறட்டை விடுபவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும். மது அருந்துபவர்கள் பெரும்பாலானோர் குறட்டை விடுவது வழக்கம். குறட்டை விடுபவர்களுக்கு இழந்தவுடன் தலைவலியோ அல்லது தொண்டையுடன் வலி ஏற்பட்டால் உடனடியாக அவர்கள் மருத்துவரை சந்திப்பது நல்லது.

குறட்டை விடுபவர்களுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தால் அதனை நிறுத்தி விடலாம். அதேபோல குறட்டை விடுபவர்கள் நேராக படுக்காமல் பக்கவாட்டில் படுக்க வேண்டும். தினசரி உணவில் மெலடோனின் அதிகம் எடுத்துக் கொண்டால் குறட்டை வராது. அதாவது வாழைப்பழம் கமலா பழம் அன்னாசிப்பழம் ஆகியவை தினம்தோறும் உட்கொள்ளலாம். அதேபோல தலையை தரை மட்டமாக வைத்து படுக்காமல் தலையணைகள் வைத்து உயர்த்தி படுக்கலாம். இதனால் சுவாசம் சீராக இருக்கும். எந்த இடையூறும் ஏற்படாது. தினம்தோறும் தேன் கலந்த இஞ்சி கலவையை குடித்து வந்தால் படிப்படியாக குறட்டை குறையும். குறட்டை விடுபவர்கள் தூங்குவதற்கு முன் பால் சாப்பிடும் பழக்கம் இருந்தால் அதனை தவிர்த்து விடலாம். ஏனென்றால் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் நாசியில் வீக்கம் ஏற்படுத்தும். இது சுவாசிப்பதற்கு இடையூறாக இருக்கும். அதேபோல தினந்தோறும் இரண்டிலிருந்து மூன்று லிட்டர் தண்ணீர் பருகி வந்தாலும் குறட்டை குறையும். ஏனென்றால் உடலில் நீர் தன்மை குறைந்து விட்டால் சளி உண்டாகும். இந்த காரணங்களால் கூட குறட்டை ஏற்படலாம்.அதனால் தினம் தோறும் தண்ணீரை அதிக அளவு குடிக்க வேண்டும்.