Breaking: கனமழை காரணமாக 3 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை!!

0
179

Breaking: கனமழை காரணமாக 3 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை!!

அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாடு புதுவை காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிலிருந்து மீதமானது முதல் மிக கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக தமிழ்நாட்டில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் மீதமானது முதல் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்து வருகிறது.

தஞ்சாவூர் மயிலாடுதுறை திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடாது மழை பெய்து வரும் காரணத்தினால், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.மேலும் தஞ்சாவூர் மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Previous articleதமிழகத்தின் இந்த மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை:! வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!
Next article“கப் அடிச்சு 15 வருஷம் ஆச்சு… இந்த வாட்டி வியூகம் வேறமாரி இருக்கும்…” ரோஹித் ஷர்மா நம்பிக்கை!