உருவாகிறது சிட்ரங் புயல் சின்னம்! தமிழகத்தில் அதிகபாதிப்பு இருக்குமா?

0
180

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அனேக இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி ராமநாதபுரம் விருதுநகர் தேனி மதுரை சிவகங்கை திண்டுக்கல் புதுக்கோட்டை தஞ்சை திருச்சி திருவாரூர் அரியலூர் பெரம்பலூர் கோவை நீலகிரி ஈரோடு போன்ற மாவட்டங்களில் ஓர் இரு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்த வரையில் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. எனவும் கூறப்பட்டுள்ளது. அந்தமான் கடற் பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நாளை வலுபெறும் எனவும், 24ஆம் தேதி அது புயலாக வலுவடைந்து மேற்கு வங்கத்தை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சிட்ரங் எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால் தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்று கணிக்கப்பட்டுள்ளது.

Previous article“மதுரை முத்து மொக்க காமெடி மாதிரி இருக்கு “… பிரின்ஸ் பார்த்து அலறி ஓடும் ரசிகர்கள்!
Next articleசபாநாயகருக்கே அதிகாரம் இருக்கிறது! போராட்டம் நடத்துவதில் என்ன நியாயம் டிடிவி தினகரன் கேள்வி!