“மதுரை முத்து மொக்க காமெடி மாதிரி இருக்கு “… பிரின்ஸ் பார்த்து அலறி ஓடும் ரசிகர்கள்!

0
83

“மதுரை முத்து மொக்க காமெடி மாதிரி இருக்கு “… பிரின்ஸ் பார்த்து அலறி ஓடும் ரசிகர்கள்!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் இன்று காலை 5 மணிக்கு ரிலீஸ் ஆனது.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் ஒரு குறுகிய கால படமாக உருவாக்கப்பட்டு இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தினை இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார். அவர் இயக்கிய ஜதி ரத்னலு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதை அடுத்து அவருக்கு இந்த பட வாய்ப்பு வழங்கப்பட்டது. சிவகார்த்திகேயனுடன், சத்யராஜ், பிரேம்ஜி அமரன், மரியா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இந்நிலையில் முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்கள் இணையத்தில் நெகட்டிவ் விமர்சனங்களை வழங்கியுள்ளனர். நகைச்சுவை படமாக உருவாக்கப்பட்ட இந்த படத்தின் நகைச்சுவைக் காட்சிகள் சுத்தமாக ஒட்டவில்லை என்று கூறியுள்ளனர். மேலும் “மதுரை முத்து பண்ணும் ஸ்டாண்ட் அப் காமெடி போல இருப்பதாகவும் “ கூறி வருகின்றனர். இதனால் பிரின்ஸ் படம் முதல் காட்சியிலேயே நெகட்டிவ் விமர்சனங்களை சந்தித்துள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு மிகக் குறுகிய காலத்திலேயே  குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் எடுத்த படத்தை பார்த்த படக்குழுவினர் கிளைமேக்ஸில் முழு திருப்தி ஏற்படாததால் மீண்டும் ஷூட் செய்து சில காட்சிகளை மாற்றியுள்ளார்களாம். மேலும் ரிலீஸுக்கு முன்பாகவே 12 நிமிடக் காட்சிகள் நீக்கப்பட்டது. அப்படி ட்ரிம் செய்யப்பட்டும் இந்த படம் ரசிகர்களைக் கவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.