குழந்தைகள் தொடர் உயிரிழப்பு! இருமல் மருந்துகள் தடை!

0
199
Children continue to die! Ban on cough medicine!
Children continue to die! Ban on cough medicine!

குழந்தைகள் தொடர் உயிரிழப்பு! இருமல் மருந்துகள் தடை!

இம்மாத முதல் வாரத்தில் ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் திடீரென மரணமடைந்தது.70 குழந்தைகளின் சிறுநீரகங்கள் பாதிப்படைந்தன.அதனால் டெல்லியை சேர்ந்த மைய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நான்கு இரும்பல் மருந்துக்கள் தடை செய்யப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து இந்தோனேசியாவில் ஆறு வயதுக்குட்பட்ட 99 குழந்தைகள் திடீரென மரணமடைந்துள்ளனர்.

மேலும் 206 குழந்தைகள் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.தொடர்ந்து குழந்தைகளின் உயிரிழப்பு அதிகரிப்பை தடுக்க அனைத்து நிறுவனங்களின் இரும்பல் மருந்துகள் விற்பனை தடை செய்வதாக இந்தோனேசியா அரசு அறிவித்துள்ளது.

மேலும் திரவ நிலையில் உள்ள இரும்பல் மருந்துக்களில் தான் நச்சு தன்மை வாய்ந்த பொருட்கள் கலக்கப்பட்டிருக்கலாம் என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.விசாரணை குழு அறிக்கை வரும் வரை எந்த இருமல் மருந்தை விற்பனை செய்யக்கூடாது என்று இந்தோனேசியா சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.இருமல் மருந்துகளால் இந்தோனேசியாவிலும் 99 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இவ்வாறான அசம்பாவிதம் எப்படி நடைபெறுகின்றது இதற்கு பின்னணியில் இருப்பது யாரேனும் இருக்கின்றார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகின்றது.

Previous articleசொந்த மகனாலேயே மானம் போச்சு! அவமானத்தில் துடிக்கும் திருச்சி சிவா!
Next articleகாதலனைக் கொன்று மகள் அருகே புதைத்த தந்தை! எந்த தந்தையாலும் தர முடியாத பரிசு!