ரயில்களில் கடும் நெரிசல்: சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்!

0
148

ரயில்களில் கடும் நெரிசல்: சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்!

தீபாவளி பண்டிகை வரும் 24ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.

இன்றிலிருந்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை வருவதால் வெளியிடங்களில் தங்கி வேலை செய்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர். சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய மக்கள் பேருந்து கிடைக்காததால் ரயிலில் பயணம் செய்கின்றனர். எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட மிகுதியாக உள்ளது. பலர் நின்று கொண்டே பயணிக்கின்றனர். பண்டிகை காலத்தில் எப்போதுமே எழும்பு ரயில் நிலையங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களில் மற்றும் பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதுவதால் பொதுமக்களின் பாதுகாப்புக்காக மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் போலீஸார்கள் சாதாரண உடலில் ஆங்காங்கே கண்காணிப்பு ஈடுபட்டுள்ளனர்.

Previous articleதமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: இந்திய கடற்பறையினர் மீது வழக்கு பதிவு!
Next articleபொன்னியன் செல்வன் படத்தின் நடிகருக்கு கொரோனா வைரஸ் உறுதி! அதிர்ச்சியில் தமிழ் சினிமா!