பூஜை பொருட்கள் பளபளவென ஜொலிக்க வேண்டுமா? இவ்வாறு சுத்தம் செய்து பாருங்கள்!

0
261

பூஜை பொருட்கள் பளபளவென ஜொலிக்க வேண்டுமா? இவ்வாறு சுத்தம் செய்து பாருங்கள்!

நாம் நம் வீட்டில் தினந்தோறும் பூஜை செய்கின்றோம் என்றால் விளக்கை வாரம் ஒரு முறை சுத்தம் செய்து விளக்கேற்றுவது மிக சிறந்தது. அவ்வாறு விளக்கை சுத்தம் செய்வதற்காக புலி, வினிகர், பேக்கிங் சோடா பொருட்களை பயன்படுத்தி நாம் விளக்கை சுத்தம் செய்வோம் ஆனால் இந்த பொருட்கள் எதையும் பயன்படுத்தாமல் விளக்கை சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவின் மூலம் காணலாம்.

இதற்கு கற்பூரம் மட்டும் இருந்தால் போதும் பூஜை பொருட்கள் அனைத்தையும் பளபளவென ஜொலிக்க வைக்கலாம். கற்பூரத்தை எவ்வாறு பயன்படுத்தி பூஜை பொருட்களை சுத்தம் செய்வது என்பதையும் காணலாம். முதலில் விளக்கை ஒரு துணியால் நன்கு துடைத்து சுத்தம் செய்ய வேண்டும். அதில் உள்ள எண்ணெய் பசைகள் அனைத்தும் நீங்கும் வகையில் துடைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

நாம் அன்றாட பயன்படுத்தும் சாமராண்டி வைத்து அதன் மூலம் வரும் சாம்பலை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கொள்ள வேண்டும். பிறகு பூஜை அறையில் பயன்படுத்தும் கற்பூரம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை நன்கு பொடி செய்து அதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அதில் அரை டீஸ்பூன் சாதம் வடித்த கஞ்சியை சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த பொருட்கள் அனைத்தையும் நன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதனை விளக்கின் மேல் நன்கு தேய்த்து இரண்டு அல்லது ஐந்து நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு அதனை நன்கு தேய்த. பிறகு தண்ணீரில் கழுவ வேண்டும். விளக்கு பளபளவென ஜொலிப்பதை காணலாம்.

 

Previous article26-10-2022- இன்றைய ராசி பலன்கள்!
Next articleபண்டைய காலத்தில் தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்கப்பட்டதா? ஏன் எதற்காக?