இங்கிலாந்தில் கடந்த சில வருடங்களாக பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் பதவியிலிருந்து கடந்த ஜூலை மாதம் 7ம் தேதி போரிஸ் ஜான்சன் பதவிவிலகினார் இதனை அடுத்து பிரதமராக பொறுப்பேற்ற லிஸ்டிரஸ் 45 நாட்களில் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கு இந்திய வம்சாவளியை சார்ந்த ரிஷி சுனக்கும் நாடாளுமன்ற மக்கள் சபையின் தலைவர் பென்னி மார்டண்ட்க்கும் நேரடி போட்டி உண்டானது இதில் ரிஷிஸ் உனக்கு 193 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததால் பிரதமர் பதவி போட்டியிலிருந்து விலகுவதாக பென்னி அறிவித்தார்.
இதனை அடுத்து கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட ரிஷி மன்னர் மூன்றாம் சார்லசை சந்தித்தார் இந்த நிலையில், ரிஷி சுனக்கை 57வது பிரதமராக நியமனம் செய்வதாக மன்னர் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன் பிறகு பிரதமர் இல்லத்தின் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ரிஷி சுனக் ஒருமைப்பாடு, தொழில் வளர்ச்சியில் தன்னுடைய தலைமையிலான அரசு கவனம் செலுத்தும் எனவும், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக சில கடினமான முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். நாட்டின் வளர்ச்சிக்காக முன்னாள் பிரதமர் லிஸ்ட்ரஸ் நடவடிக்கை மேற்கொண்டு இருந்தாலும் அதில் சில தவறுகள் இருந்ததாகவும் ரிஷிசுனக் தெரிவித்தார்.
ரிஷிஸ்னத்தின் மாமனாராம் இன்ஃபோசிஸ் இணை நிறுவனருமான நாராயணமூர்த்தி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரிஷி சொன்ன தொடர்பாக தாங்கள் பெருமைப்படுவதாகவும் இங்கிலாந்து மக்களுக்கு அவர் தன்னாலான அனைத்து விதமான நன்மைகளையும் செய்வார் எனவும் நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார் அதேபோல உலகின் பல்வேறு நாடுகளைச் சார்ந்த தலைவர்களும் ரிஷி சுனக்குக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.