அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படும் தேதி வெளியீடு! பக்தர்களுக்கு அனுமதி அளிக்கும் மாதம்?

0
148
Ram temple opening date in Ayodhya released! The month of giving permission to devotees?
Ram temple opening date in Ayodhya released! The month of giving permission to devotees?

அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படும் தேதி வெளியீடு! பக்தர்களுக்கு அனுமதி அளிக்கும் மாதம்?

கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தது.அந்த உத்தரவின் பேரில் 2020ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ,பிரதமர் மோடி ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.மேலும் அங்கு நடக்கும் கட்டுமான பணிகளை கவனிக்க ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத்ராய் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் 50 சதவீதம் முடிவடைந்தது.மேலும் கட்டுமான பணிகளின் ஒட்டுமொத்த முன்னேற்றம் திருப்தி அளிக்கும் வகையில் உள்ளது.இந்நிலையில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கோவிலின் தரைத்தளம் தயாராகி விடும்.அதனையடுத்து 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி மகர சங்கராந்தி நாளில் கோவில் கர்ப்பகிரகத்தில் ராமர் சிலைகள் நிறுவப்படும் என கூறினார்.

அதனைதொடர்ந்து அதே மாதத்தில் ராமர் கோவில் பக்தர்களுக்கு திறந்து சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும் இந்த கோவில் கட்டி முடிப்பதற்கு மொத்தம் ரூ 1,800 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.மேலும் கோவிலில் பிரபலமான இந்து மடாதிபதிகள் சிலைகள் வைப்பதற்கு இடம் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Parthipan K