மோட்டார் வாகன சட்ட திருத்தம்! இன்று முதல் இதற்கான அபராதம் வசூல் செய்யப்படும்!
மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத் திருத்தம் கொண்டுவந்துள்ளது.அந்த சட்ட திருத்தத்தின்படி வாகன விதி மீறல் தொடர்பான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும் இதற்கான அரசானை அண்மையில் தான் வெளியிடப்பட்டது.மேலும் சென்னை நகர காவல்துறை ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.அந்த அறிவிப்பில் வருகிற 28ஆம் தேதிக்குமேல் புதிய வாகன அபராதத் தொகை வசூலிக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் திருத்தம் செய்யப்பட மோட்டார் வாகன சட்டத்தின்படி இன்று முதல் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.மேலும் புதிய சட்ட திருத்தத்தின் படி போதையில் வாகனம் ஓட்டுபவரிடம் அபராதம் வசூல் செய்யப்படுவதுடன் அவரது பின்னல் அமர்ந்திருப்பவருக்கும் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி அபராதம் தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது .மேலும் ஹெல்மெட் ,சீட்பெல்ட் அணியாமல் வாகனங்களை ஓட்டுவது உள்பட போக்குவரத்து விதிகளை மீறினால் குறைந்தபட்சம் ரூ 1,000ல் இருந்து ரூ 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.