கோவை கார் விபத்தில் உயிரிழந்தவர் கேட்ட மன்னிப்பு! “போலீசார் ஏன் மவுனம்” பாஜக அண்ணாமலை கேள்வி??
நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.தீபாவளிக்கு முந்தைய நாளே அனைவரும் தயாராகி வந்தனர்.இந்நிலையில் கோவையில் உக்கடம் என்ற பகுதியில் பெரும் அசம்பாவிதம் ஒன்று நடந்தது.அதில் கார் ஒன்று வெடித்து சிதறியது.அந்த காரில் இருந்த ஒருவர் உயிரிழந்தார்.
மேலும் அந்த சம்பவம் குறித்து போலீசார் சோதனை மேற்கொண்டனர்.அந்த சோதனையில் காரை சுற்றி சிறு ஆணிகள் ,இரும்பு குண்டுகள் இருந்தது.அதனையடுத்து டிஜிபி சைலேந்திரபாபு கோவை சென்று நேரில் ஆய்வு செய்தார்.இதனைதொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டத்தில், இலங்கையில் 269 பேர் பலியான சம்பவத்தில் ஜமேசா முபினிடமும் விசாரணை செய்தது தெரியவந்தது.
இந்நிலையில் அக்டோபர் 23ஆம் தேதி வெடித்து சிதறிய காரை ஒட்டிவந்த வரும் ஜமேசா முபின் என்பதை கண்டுபிடித்துள்ளனர். அந்த அடிப்படையில் இறந்தவரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது அப்போது அங்கு 55கிலோ அமோனியம் நைட்ரேட் ,பொட்டாசியம் ,சோடியம் ,ப்யூஸ் வயர்ஸ் ,7 வோல்ட் பேட்டரி போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டது.
மேலும் இது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில் காரை ஓட்டி வந்த ஜமேசா முபின் அவருடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் மாற்றியுள்ளார்.அதில் என்னுடைய இறப்பு செய்தி உங்களுக்கு தெரியும் முன்னரே நான் செய்த தவறுகளை மன்னித்து விடுங்கள் ,என்னுடைய குற்றங்களை மறந்துவிடுங்கள் என் இறுதி சடங்கில் பங்கு பெறுங்கள் எனக்காக வழிபாடு செய்யுங்கள் என பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து அவருடைய வீட்டின் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அதில் இரண்டு சிலண்டர்களை 5பேர் காரில் ஏற்றப்படும் காட்சி பதிவாகியுள்ளது.இந்த சிலண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் ஐந்து பேரை கைது செய்துள்ளனர்.அவர்களின் பெயர் விவரங்கள் போன்றவற்றை கொடுத்துள்ளனர்.
இத்தனை விவரங்களை போலீசார் கொடுத்தும் ஜமேசா முபின் வைத்த வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த ஸ்டேட்டஸ்யை பார்க்கையில் தானாக நடைபெற்ற அசம்பாவிதம் போல் தெரியவில்லை. தற்கொலை படை தாக்குதல் போல உள்ளது.ஆனால் அது குறித்து போலீசார் எந்த தகவலையும் ஏன் கொடுக்கவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.