நாளை தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை! இந்த 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
152

தற்போது தமிழகத்தில் பருவமழை தொடங்கியிருப்பதால் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதோடு தமிழகத்தில் பல்வேறு நீர்த்தேக்கங்கள் அணைகள் ஏரிகள் என்று அனைத்து விதமான நீர்நிலைகளும் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள்.

ஆனால் அவ்வப்போது தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி அதன் மூலமாக மழைப்பொழிவு வருவதுடன் கடலில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழகம் கேரளா தெற்கு ஆந்திராவில் நாளை வடகிழக்கு பருவ மழை தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சென்னையில் பத்திரிகையாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால், தமிழகம் மற்றும் புதுவையில் வரும் 24 மணி நேரத்தில் ஓரிரு பகுதிகளில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது எனவும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

வரும் நவம்பர் மாதம் நான்காம் தேதி வரை தமிழ்நாடு புதுவை காரைக்காலில் அனேக பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் பாலச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், நாளை அரியலூர், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ,சிவகங்கை ,ராமநாதபுரம் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு தேனி திண்டுக்கல் தூத்துக்குடி தென்காசி விருதுநகர் கன்னியாகுமரி திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Previous articleகோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்! மத்திய உளவுத்துறை எச்சரித்தும் அலட்சியம் காட்டிய தமிழக காவல்துறை!
Next articleமுத்துராமலிங்கத்தேவர் குருபூஜை! விழாவில் கலந்து கொள்ள வரும் வாகனங்களின் வழித்தடங்கள் இதுதான்!