முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை! விழாவில் கலந்து கொள்ள வரும் வாகனங்களின் வழித்தடங்கள் இதுதான்!

0
114
muthuramalingadevar-gurupuja-this-is-the-route-of-the-vehicles-coming-to-participate-in-the-festival
muthuramalingadevar-gurupuja-this-is-the-route-of-the-vehicles-coming-to-participate-in-the-festival

முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை! விழாவில் கலந்து கொள்ள வரும் வாகனங்களின் வழித்தடங்கள் இதுதான்!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் வரும் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் குருபூஜை நடக்க உள்ளது.அந்த விழாவில் பங்கேற்க திருச்சி ,புதுகோட்டை ,தஞ்சாவூர் ,திருவாரூர்,நாகப்பட்டினம் ,பெரம்பலூர் ,அரியலூர் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வருவது வழக்கம்.

அவ்வாறு அந்த பகுதிகளில் இருந்து வாகனங்கள் காரைக்குடி ,சிவகங்கை ,மானாமதுரை ,பார்த்திபனூர் ,அபிராமம் வழியாக பசும்பொன் வந்தடையும்.மேலும் அவ்வழியாக வரும் வாகனங்கள் அதே வழியாக தான் திரும்பி செல்ல வேண்டும்.மேலும் இந்த  மாவட்ட வாகனங்கள் கிழக்கு கடற்கரை சாலை வழியாக ராமநாதபுரம் வரக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து சென்னை ,வேலூர் ,திருவண்ணாமலை ,காஞ்சிபுரம் ,திருவள்ளூர் ,விழுப்புரம் ,கடலூர் மாவட்ட வாகனங்கள் திருச்சி ,மதுரை ,மானாமதுரை ,பார்த்திபனூர் ,அபிராமம் வழியாக பசும்பொன் வந்தடையும்.இந்த  வாகனங்களும் அதே வழியாகத்தான் திரும்பி செல்ல வேண்டும்.

இதனை தொடர்ந்து  கோவை ,திருப்பூர் ,நீலகிரி ,சேலம் ,ஈரோடு ,நாமக்கல் ,கரூர் ,தர்மபுரி,கிருஷ்ணகிரி மாவட்ட வாகனங்கள் ,திண்டுக்கல் ,மதுரை ,மானாமதுரை ,பார்த்திபனூர் ,அபிராமம் வழியாக பசும்பொன் வந்தடையும்.அந்த வாகனங்கள் அனைத்தும் அதே வழியாகத்தான் திரும்ப செல்ல வேண்டும்.

மதுரை தேனி ,திண்டுக்கல் மாவட்ட வாகனங்கள் மதுரை ,மானாமதுரை ,பார்த்திபனூர் ,அபிராமம் வழியாக பசும்பொன் வந்தடையும் திரும்ப வந்த வழியாகவே செல்ல வேண்டும்.தூத்துக்குடி ,திருநெல்வேலி ,கன்னியாகுமரி மாவட்ட வாகனங்கள் அருப்புக்கோட்டை ,எம்.ரெட்டியபட்டி மண்டப சாலை ,கே.விலக்கு ,கண்ணார்பட்டி கமுதி வழியாக பசும்பொன் வந்தடையும்.

இல்லையெனில் தூத்துக்குடி ,சூரங்குடி ,சாயல்குடி ,கோவிலாங்குளம் , கமுதி வழியாக பசும்பொன் வந்தடையும்.மேலும் விருதுநகர் மாவட்ட வாகனங்கள் கமுதி வழியாக பசும்பொன் வந்து அதே வழியாக திரும்பி செல்ல வேண்டும்.சிவகங்கை மாவட்ட வாகனங்கள் சிவகங்கை ,மானாமதுரை ,பார்த்திபனூர் அபிராமம்வழியாக பசும்பொன் வந்தடையும் அதே வழியாக திரும்பி செல்ல வேண்டியும் என கூறப்படுகின்றது.

author avatar
Parthipan K