நாடு முன்னேற ரூபாய் நோட்டில் லட்சுமி படத்தை அச்சிடுக! முதல்வர் மோடிக்கு கொடுத்த ரெக்வெஸ்ட் லெட்டர்!

Photo of author

By Rupa

நாடு முன்னேற ரூபாய் நோட்டில் லட்சுமி படத்தை அச்சிடுக! முதல்வர் மோடிக்கு கொடுத்த ரெக்வெஸ்ட் லெட்டர்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ராவால் இரு தினங்களுக்கு முன்பு இந்திய ரூபாய் நோட்டுகளில் லட்சுமி மற்றும் விநாயகர் படத்தை சேர்த்து அச்சடிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்தார். தற்பொழுது இந்தியாவில் பொருளாதாரம் மிகவும் வீழ்ச்சடைந்து வருவதாகவும், கடவுளின் ஆசிர்வாதம் இருந்தால் மட்டுமே அதில் இருந்து மீள முடியும் என்ற வகையில் இவர் கூறியிருந்தார். இவர் கூறியது பாஜகவிற்கு பெரும் அதிர்ச்சியாகவே இருந்தது.

ஏனென்றால் அரவிந்த் கெஜ்ரவாலின் வளர்ச்சியை கண்டு ஒரு பக்கம் பாஜகவிற்கு சிறு பயம் உள்ளது. அவரை எதிர்க்கும் ஒரு பெரிய ஆயுதமாக, இவர் இந்துக்களின் விரோதி என்று சித்தரித்து வந்தனர். இவ்வாறு கூறிவந்த நிலையில் திடீரென்று இவர், இந்தியாவிற்கு செழிப்பு உண்டாக வேண்டும் என்றால் மகாத்மா காந்தி படத்துடன் விநாயகர் லட்சுமி படங்களையும் சேர்க்க வேண்டும் என கூறியது அவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று இதற்கு ஒரு படி மேலாக சென்று, பிரதமருக்கு இது குறித்து கடிதமும் எழுதியுள்ளார். வரும் காலங்களில் இந்திய ரூபாய் நோட்டுகளில் விநாயகர் மற்றும் லட்சுமி படத்தை உடனடியாக அச்சிட வேண்டும். இதனை நான் மட்டுமல்ல 130 கோடி இந்தியர்கள் விரும்புகின்றனர். இந்தியா பொருளாதார வீழ்ச்சி அடைந்து கொண்டிருக்கும் இந்த நிலையில் இறைவனின் ஆசியானது மிகவும் முக்கியம்.

இவ்வாறு நோட்டுகளில் இறைவனின் புகைப்படத்தை அச்சிடுவதால் பொருளாதார மேம்படையும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.இவ்வாறு இவர் கூறி அவர்கள் இவர் மீது கூறி வந்த இந்துக்களின் விரோதி என்ற பட்டத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.