திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் அதிமுகவிற்கு எதிர்க்கட்சி என்ற முறையில் பதில் சொன்னதை விடவும் பாஜகவிற்கு பதில் சொல்வதை அந்த கட்சி மிகவும் கடினமாக கருதுகிறது. பாஜகவிற்கு திமுக பதில் சொல்ல முடியாமல் பல இடங்களில் திணறி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
நாள்தோறும் அந்தக் கட்சியின் மாநில தலைமை வெளியிடும் அறிக்கைகள் மற்றும் பேட்டிகள் வெளியிட்டவை திமுகவிற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறது.
அதோடு திமுகவின் பல்வேறு அமைச்சர்களையும் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை வெளுத்து வாங்கி வருகிறார். அந்த வகையில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் இடையே வார்த்தை போர் நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. சமீபத்தில் தீபாவளி பண்டிகைக்கு டாஸ்மாக் மூலமாக வந்த வருமானம் குறித்து தவறான தகவலை பரப்பிய செய்தி ஊடகத்தின் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை செய்திருந்தால் இதற்கு அண்ணாமலை, செந்தில் பாலாஜியை சாராய அமைச்சர் என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்திருந்தார்.
இப்படியான சூழ்நிலையில் கோவை விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் வார்த்தை போர் உண்டாகியுள்ளது. நேற்று முன்தினம் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கட்சி தலைமைக்கு தெரியாமல் பாஜக மாவட்ட நிர்வாகிகள் எப்படி முழு அடைப்பு போராட்டத்தை அறிவிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினார். கட்சியை சரியான முறையில் வழிநடத்தும் தலைவர் என்றால் ஏன் ஒப்புதல் இல்லாமல் முழு அடைப்பு போராட்டத்தை அறிவித்தார்கள்? நீதிமன்றத்தில் தனக்கு தொடர்பில்லை என்பது முறையானது கிடையாது. அந்த கட்சிக்குள் ஒரு முடிவுக்கு வர வேண்டும். பாஜக தலைவர் ஒரு அரசியல் கோமாளி அரசியல் கோமாளி தொடர்பான கேள்விகளை என்னிடம் கேட்க வேண்டாம் என்று காட்டமாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவை சம்பவம் குறித்து இதுவரையில் தமிழக முதலமைச்சர் மவுனம் காப்பது எல்லோரும் அறிந்தது தான். இந்த துறைக்கு சற்றும் தொடர்பு இல்லாத சாராய அமைச்சர் கோவையில் நடைபெற்ற தற்கொலை படை தாக்குதல் தொடர்பாக சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். ஊழல் செய்வது எப்படி என்பதை மட்டுமே அறிந்து வைத்திருக்கும் இவருக்கும் உள்துறைக்கும் என்ன தொடர்பு? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி வழங்கி உள்ளார்.
இதுகுறித்து மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள வலைதள பதிவில் எனக்கும் கோவை சம்பவத்திற்கும் என்ன தொடர்பு என்று அரசியல் கோமாளி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்படி அமைச்சராக பொறுப்பேற்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளேன்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி நிலைமையை ஆய்ந்து, ஊடகத்தைச் சந்தித்து விளக்கினேன். மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒத்த ஓட்டு ஓட்டைவாய் எதையாவது உளறிக் கொட்டி ஊடக வெளிச்சத்திலேயே காய்ந்து கொண்டிருக்கிறது. சுயபுத்தியும் இல்லை; சொன்னாலும் புரிவதில்லை.(2/2)
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) October 30, 2022
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி நிலைமையை ஆராய்ந்து ஊடகத்தை சந்தித்து விளக்கினேன். மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒத்த ஓட்டு ஓட்ட வாய் எதையாவது உளறி கொட்டி ஊடக வெளிச்சத்திலேயே காய்ந்து கொண்டிருக்கிறது சுய புத்தியும் இல்லை. சொன்னாலும் புரிவதில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.