கட்சித் தலைவருக்கே மரியாதை இல்லையா? கோவையில் அண்ணாமலைக்கு ஏற்பட்ட அவமானம் கட்சிக்குள் பிளவா?

0
148

கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து பாஜகவின் மாநில தலைமை தட்டை முன்வைத்து வருகிறது. இந்த கார் குண்டுவெடிப்பில் காவல்துறையினர் தகவலை வெளியிடும் பல உறுதிப்படுத்தாத தகவல்களை வெளிப்படுத்தி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

அவருடைய பேட்டிகள் சில சர்ச்சுகளை உண்டாக்கும் விதத்தில் உள்ளதாக ஆளுங்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றன அதில் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தை பலர் ஒன்றிணைந்து செய்து இருக்கிறார்கள். மத்திய உளவுத்துறையின் எச்சரிக்கை மாநில காவல்துறையினர் மீறிவிட்டதாக அண்ணாமலை குற்றம் சுமத்தினார்.

இந்த நிலையில் தான் இன்று கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதிக்கு பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை வருகை தந்தார் சம்பவ இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அதற்காக காவல்துறையினர் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட சமயத்தில் தான் அண்ணாமலை திடீரென்று கோவிலுக்கு சென்றுள்ளார். பாஜகவின் நிர்வாகிகள் புடைசூழ அண்ணாமலை சம்பவ இடத்திற்கு சென்றடைந்தார்.

ஒரு கார் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்த இடம் இன்று அங்கே தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடப்பதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் அங்கே அண்ணாமலை திடீரென்று சென்றிருக்கிறார். அங்கே அண்ணாமலை வருகையை முன்னிட்டு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டார்கள். உள்ளே பூசாரிகளிடம் நீண்ட நேரம் அண்ணாமலை ஆலோசனை செய்தார். காவல்துறையினர் நடத்திய விசாரணை தொடர்பாக அவர்களிடம் கேட்டறிந்ததாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த நிகழ்வில் கோவை தெற்கு தொகுதியின் பாஜக சட்டசபை உறுப்பினர் வானதி சீனிவாசன் பங்கேற்று கொள்ளவில்லை. இன்று கோவையில் பாஜக சார்பாக முழு அடைப்பு நடத்தப்படும் என்று வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர். கோவை மாவட்ட பாஜக சட்டசபை உறுப்பினர் ஒருவர் இப்படி அண்ணாமலையின் வருகையின் போது அவருடன் இல்லாதது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இன்று கோவையில் பாஜக சார்பாக முழு அடைப்பு நடத்தப்படும் என்று வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த மாவட்ட பாஜக சார்பாகவும் இதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் இந்த முழு அடைப்பிற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த முழு அடைப்பிற்கு மாநில தலைமை அழைப்பு விடுக்கவில்லை என்று அண்ணாமலை விளக்கம் அளித்தார். நாங்கள் முழு அடைப்பு நடத்தியே தீருவோம். முடிந்தால் ஆளும் திமுக இதனை தடுக்கட்டும் என்று வானதி சீனிவாசன் சவால் விட்ட அதே நாள்தான் அண்ணாமலை இப்படி தெரிவித்து இருந்தார். அவருடைய இந்த கருத்து மிகப்பெரிய விவாதத்தை உண்டாக்கியது.

பாஜகவிற்கு உள்ளே ஏதாவது பிளவு உண்டாகியுள்ளதா? அண்ணாமலை ஏன் இப்படி வானதி சீனிவாசன் சொன்ன கருத்துக்கு எதிராக பேசியிருக்கிறார்? என்று கேள்விகளை எழுந்தனர். இந்த நிலையில் தான் இன்று அண்ணாமலை கோவிலுக்கு வந்த நிகழ்வில் கோவை தெற்கு தொகுதி சட்டசபை உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் பங்கேற்று கொள்ளவில்லை. அதேபோல மற்றொரு மூத்த தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் கோவையிலிருந்தும் இந்த நிகழ்வில் பங்கேற்று கொள்ளவில்லை. இது பாஜகவில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஇனி பேரணி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கிடையாது! மீறினால் கடும் நடவடிக்கை!
Next articleபிலிப்பைன்ஸை தலைகீழ் மாற்றிய “நால்கே புயல்” – பலி எண்ணிக்கை 100-க்கு மேல் உயர்வு!