ஆர் எஸ் எஸ் ஊர்வலம்: கிடுக்குபிடி கூடாது.. கோர்ட் ஆர்டர்! காவல்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட டிஜிபி! 

ஆர் எஸ் எஸ் ஊர்வலம்: கிடுக்குபிடி கூடாது.. கோர்ட் ஆர்டர்! காவல்துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவிட்ட டிஜிபி!

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று ஆர் எஸ் எஸ், ஊர்வலம் நடத்த அனுமதி வழங்குமாறு மனு அளித்திருந்தது. ஆனால் டிஜிபி உள்ளிட்டோர் இதனை நிராகரித்து விட்டனர். ஏனென்றால் காந்தி ஜெயந்திக்கு முன்புதான் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா என்ற நிறுவனத்தின் ஊழியர்கள் மீது வழக்குத் தொடுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். இது ஆங்காங்கே போராட்டமாக இருந்த நிலையில், ஆர் எஸ் எஸ் அணி வகுப்பிற்கு அனுமதி கொடுத்தால் சட்டம் ஒழுங்கு சீரழிக்க நேரிடும் என எண்ணினர்.

உச்ச நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நிலையிலும் அதனை இவர்கள் ஏற்கவில்லை. இந்த வழக்கு மீண்டும் இன்று அமர்வுக்கு வந்தது. ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க கோரி ஒன்பது பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இது குறித்த இந்த வழக்கில், வரும் ஆறாம் தேதி ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு தமிழக காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். இது குறித்து டிஜிபி அனைத்து காவல்துறைக்கும் அந்தந்த மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்கும் வகையில் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி அனுமதி வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி என்று ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடத்துமாயின், விடுதலை சிறுத்தை கட்சியும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடத்துவதாக தெரிவித்திருந்தது. அவர்களுக்கும் அன்று அனுமதி வழங்கவில்லை. அதற்கு மாறாக அக்டோபர் 11ஆம் தேதி அனுமதி பெறப்பட்ட்டு, இடதுசாரிகள் சார்பாக சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினர். தற்பொழுது ஆர்எஸ்எஸ் ஊர்வலம் வரும் ஆறாம் தேதி நடத்த அனுமதி அளித்துள்ளனர்.

Leave a Comment