பத்திரிக்கையாளர்கள் என்றாலே குரங்கு போல தான்!! என்னால் மன்னிப்பெல்லாம் கேட்ட முடியாது.. அது என் ரத்தத்திலே கிடையாது!
பாஜக ஹிந்தியை திணிக்கிறது என்று திமுக நடத்திய போராட்டத்தை எதிர்த்து, அண்ணாமலை திமுக தான் ஆங்கிலத்தை திணிக்கிறது என்ற போராட்டத்தை நடத்தினார். இது கடலூரில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டவர் செய்தவர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்பொழுது அங்கிருந்த ஒருவர் செந்தில் பாலாஜி கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து உங்கள் மீது குற்றம் சுமத்தியுள்ள நிலையில் உங்கள் கருத்து என்னவாக இருக்கும் என கேட்டார்.
அதற்கு இவர், ஏன் குரங்குகளைப் போல் எங்கு சென்றாலும் தாவித்தாவி வருகிறீர்கள் என்று நக்கலாக பத்திரிக்கையாளர்களை விமர்சித்தார். அதற்குப் பின்னர் தான் நிருபர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார். இவ்வாறு இவர், பத்திரிகையாளர்களை பேசியது அனைத்து பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் இன்று கோவை உக்கடம் பகுதியில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் பொழுது பத்திரிக்கையாளர்கள் இவரை சூழ்ந்தனர்.
அதில் பலரும், நீங்கள் எங்களைப் பற்றி அவதூறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார். அதற்கு அண்ணாமலை, பத்திரிகையாளர்களை மரியாதையாகவும் நேர்மையாகவும் மற்றவர்களை விட 99 சதவீதம் மரியாதையாக நான் நடத்துகிறேன். சில பத்திரிக்கையாளர்கள் தவறான செய்திகளை மக்களிடம் பரப்புகின்றனர். அதனால் என்னால் மன்னிப்பு கேட்க முடியாது. மன்னிப்பு கேட்பது என்பது எனது ரத்தத்திலே கிடையாது.
நான் தவறு இழைத்திருந்தால் தான் மன்னிப்பு கேட்க முடியும். நான் செய்யாத தவறுக்கு எப்படி மன்னிப்பு கேட்பேன்?? நீங்கள் என்னை நிராகரிக்க வேண்டும் என்றால் நிராகரித்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். இனி செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்வதும் கலந்து கொள்ளாமல் போவதும் உங்களது விருப்பம், நான் எதுவும் செய்ய முடியாது இவ்வாறு கூறி அங்கிருந்து வெளியேறினார். மேலும் இவரது பதில் அங்குள்ள பத்திரிகையாளர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.