தமிழக அரசு: விவசாயிகளுக்கு அரசு வழங்கும் 90% மானியம்! உடனே விண்ணப்பியுங்கள்!

0
214
90% subsidy provided by the government to farmers! Apply now!
90% subsidy provided by the government to farmers! Apply now!

தமிழக அரசு: விவசாயிகளுக்கு அரசு வழங்கும் 90% மானியம்! உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழக அரசு விவசாயிகளின் நலனுக்காக பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு விவசாயத்திற்காக ஒரு லட்சம் அளவில் மின் இணைப்புகள் இணைக்கப்பட்டது. நடந்து முடிந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வேளாண் துறை சார்பில் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து இருந்தனர். அதில், நமது தமிழகத்தில் அதிக அளவு சூரிய சக்தி கிடைக்கிறது, அதனை மின் சக்தியாக மாற்றி விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் திட்டமிட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

இவர்கள் வைத்த கோரிக்கை ஏற்ப, தமிழக அரசும் மத்திய அரசுடன் சேர்ந்து சூரிய சக்தியால் இயங்கக்கூடிய பம்பு செட்டுகளுக்கு 70% வரை மானியம் வழங்கப்படும் என கூறினர். அந்த வகையில் ஐந்து குதிரை திறன் கொண்ட நீர்மூழ்கி மோட்டார் பம்பு செட்டின் மொத்த விலை இரண்டு லட்சத்தி 69 ஆயிரம் ஆக உள்ளது. இதற்கு தமிழக அரசு ஒரு லட்சத்து 88 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்குகிறது.

விவசாயிகள் ரூ 80 ஆயிரம் மட்டுமே செலுத்தும் படியாக உள்ளது. இதே போல் ஏசி மற்றும் டி சி நீர்மூழ்கி பம்புகளின் சராசரி விலைக்கு ஏற்ப மானியம் தொகுத்து வழங்கியுள்ளனர். குறிப்பாக எஸ்சி மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த விவசாயிகளுக்கு 90 சதவீதம் மானியம் வழங்குகின்றனர்.

யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதி:

இந்த மானியம் பெற வேண்டும் என்றால் இவர்களுக்கு முன்னதாகவே கிணறு இருந்து அதில் டீசல் இன்ஜின் மூலம் தண்ணீர் பாய்ச்சுவராக இருத்தல் வேண்டும். இதனைத் தவிர புதிதாக கிணறு அமைக்கும் படி இருந்தால், சேப் பிருக்கா எனப்படும் அரசின் நிலநீர் பாதுகாப்பு திட்டத்தின் கீழே இது கொண்டுவரப்படும் எனக் கூறியுள்ளனர்.

இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்கள் உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்.http//pmkusum.tn.gov.in  என்ற இணையத்திற்கு சென்று உரிதான ஆவணங்களை சமர்பித்து விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளனர்.

இதை விண்ணப்பிக்க ஆதார் அட்டை, புகைப்படம், கிணறு உள்ள இடத்தின் சிட்டா மற்றும் அடங்கல், ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினராக இருந்தால் அதற்கான ஜாதி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Previous articleகடல் நீரை உறிஞ்சும் மேகம்! வைரலாகும் அபூர்வ வீடியோ காட்சி
Next articleபருவமழையை எதிர்கொள்ள அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை கூட்டம்