கடல் நீரை உறிஞ்சும் மேகம்! வைரலாகும் அபூர்வ வீடியோ காட்சி
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில அபூர்வ வீடியோக்கள் வைரலாக பரவுவது வழக்கமானதே. அந்த வகையில் தற்போது கடல் நீரை உறிஞ்சும் மேகம் குறித்த அபூர்வ வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
இலங்கை யாழ்ப்பணம் பருத்தித்துறை கடற்பகுதியில் கடல் நீரானது சுழல் காற்று போல உருவாகி வானத்தை நோக்கி மேலே செல்கிறது. சில நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்த அபூர்வ காட்சி உடனே கலைந்து சென்றதாக அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.இதனை அங்கிருந்த சிலர் வீடியோவாக படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி உள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
கடலில் இவ்வாறு நிகழும் இந்த அபூர்வ நிகழ்விற்கு ரொனாடா இன்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது மேகங்கள் கீழே இறங்கி வந்து கடல் நீரை உறிஞ்சி எடுக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த வகையான சுழல் காற்று இடி மற்றும் மின்னலையும் தோற்றுவிக்க கூடிய மேகத்தின் உட்பகுதியில் தொடங்கி நில மட்டம் வரை நீண்டு வேகத்தோடு சுழல்கின்ற வளிநிரல் ஆகும். இந்த சுழல் காற்று சூறாவளியை விட பார்க்க பயங்கரமாக உள்ளதாக அதை பார்த்தவர்கள் கூறுகின்றனர்.