தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகளுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தொடர்ச்சியாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். கோவையில் நடைபெற்ற சிலிண்டர் வெடி விபத்து சம்பவம் குறித்து அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்தில் பாஜகவினரும், ஆளுணரும் செயல்படுவது அதிர்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் திருமாவளவனனை பொறுத்தவரையில் அரசியலுக்கு ஒரு கொள்கை தன்னுடைய வாழ்க்கை நெறிக்கு ஒரு கொள்கை என்று வாழ்ந்து வருபவர். இந்து மதக் கொள்கையை மிக கடுமையாக எதிர்க்கும் அவர் தன்னுடைய சொந்த வாழ்வில் இந்து மத கொள்கைகளையும், இந்துமத நம்பிக்கைகளையும் பின்பற்றுகிறார் என்று சொன்னால் அது மிகையாகாது.
ஆனால் அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காகவே இந்துக்களையும், இந்து மத நம்பிக்கைகளையும் கொச்சைப்படுத்தும் விதமாக அவர் அவ்வப்போது பேசி வருகிறார். இதேபோன்று ஒரு முறை நாடாளுமன்றத்தில் இந்து மதத்தை பற்றி அவதூறாக பேசியதால் கோபமடைந்த பாஜகவை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் நாடாளுமன்றத்தில் இருந்து விரட்டி அடிக்க பட்டார் திருமாவளவன் என்பது அனைவரும் அறிந்த உண்மைதான்.
ஆகவே தான் தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அடைந்து விட்டால் டெல்லி நாடாளுமன்றத்தில் நமக்கு ஏற்பட்ட அதே கதி தமிழகத்திலும் ஏற்படலாம் என்பதை மனதில் வைத்துக் கொண்டு தான் அவர் பாஜகவிற்கு எதிராக தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வருகிறார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், தமிழக ஆளுநர் திமுக ஆட்சிக்கு எதிராக தவறான தகவல் தெரிவிப்பதும், தன்னுடைய பதவியான ஆளுநர் என்பதை மறந்து ஆர் எஸ் எஸ் தொண்டராக செயல்படுவதாகவும் குற்றம் சுமத்தினார். அதோடு ஆளுநர் அரசியல் பேசுகிறார். ஆன்மீகம் என்ற பெயரில் மதவாதம் பேசுகிறார். திராவிட இயக்கங்களுக்கு எதிராக அவதூறுகளை பரப்புகிறார் ஆளுநர் என்று விமர்சனம் செய்திருந்தார் திருமாவளவன்.
சனாதனத்தை தூக்கி பிடிக்கும் ஆர் எஸ் எஸ் அமைப்பை அம்பலப்படுத்தும் முயற்சியாக நவம்பர் மாதம் 6 ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் மனுஷ்மருதி புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார். அதோடு தமிழ்நாட்டிலும் பாஜக வாலாட்ட முயற்சிக்கிறது. தமிழ்நாட்டில் பாஜக வால் ஆட்டினால் ஒட்ட நறுக்குவோம் என்று திருமாவளவன் ஆவேசமாக பேசியுள்ளார் இதனை கண்டிக்கும் விதத்தில் பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள வலைதளப்பதிவில்
தமிழகத்தில் தொடர்ந்து மத துவேசத்தை பரப்பி சாதிய வேற்றுமைகளை உருவாக்கி பதற்றத்தை உருவாக்கி வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்களை கைது செய்ய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட வேண்டும்.
பெண்கள் மற்றும் சாதி குறித்து திருமாவளவனின் கருத்துக்களால் அமைதி பூங்காவன தமிழகத்தில் மத மற்றும் சாதிய மோதல்கள் உருவானால் அதற்கு தமிழக காவல்துறை மற்றும் தமிழக அரசை பொறுப்பேற்க வேண்டும் என்று பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து தமிழகத்தில் மத துவேஷத்தை பரப்பி, சாதிய வேற்றுமைகளை உருவாக்கி பதட்டத்தை உருவாக்கி வரும் வி சி க தலைவர் தொல். திருமாவளவன் அவர்களை கைது செய்ய @CMOTamilnadu அவர்கள் உத்தரவிட வேண்டும். பெண்கள் மற்றும் சாதி குறித்து திருமாவளவனின் கருத்துக்களால் அமைதி பூங்காவான (1/2)
— Narayanan Thirupathy (@narayanantbjp) November 1, 2022
என்னதான் தேசிய கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பில் அவர் இருந்தாலும் கூட திருமாவளவனின் இது போன்ற முயற்சிகளுக்கு காரணம் என்ன என்பதை சரியாக அவரால் கணிக்க முடியவில்லை என்பதே தமிழகத்தில் பலரின் கருத்தாக இருந்து வருகிறது.
அதாவது திருமாவளவன் இவ்வளவு துடிப்பாக பேசுகிறார் என்றால் நிச்சயமாக அவருக்குப் பின்னால் ஆளும் தரப்பு இருக்க வேண்டும் என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.
மேலும் தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுகவிற்கு மவுசு குறைகிறதோ, அப்பொழுதெல்லாம் திருமாவளவன் போன்றவரை வைத்து சாதி மற்றும் மத ரீதியிலான மோதல்களை ஏற்படுத்தி அதன் மூலமாக தன்னுடைய செல்வாக்கை நிலை நிறுத்தி கொள்வதற்கு திமுக முயற்சி செய்யும் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.