ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! யுபிஐ பரிவர்த்தனை கோடி கணக்கில் உயர்வு!  

0
72
Reserve Bank announced! UPI transactions increase in crores!Reserve Bank announced! UPI transactions increase in crores!
Reserve Bank announced! UPI transactions increase in crores!

ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு! யுபிஐ பரிவர்த்தனை கோடி கணக்கில் உயர்வு!

பெரும்பாலான மக்கள் அவரவர்களின் தேவைகளை தற்போது வீட்டில் இருந்த படியே பூர்த்தி செய்து கொள்கின்றனர். ஆன்லைன் மூலமாகவே காய்கறிகள் ,மளிகை பொருட்கள் ,உணவு ,ஆடை என அனைத்து பொருட்களையும் வாங்கி கொள்ள முடியும் அது போலவே ஆன்லைன் மூலமாகவே ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து மற்றொருவரின் வங்கி கணக்கிற்கு பணம் பரிமாற்றம் செய்து கொள்ள முடியும்.

அதற்கென தற்போது கூகுள் பே ,போன் பே,பேடிஎம் என எண்ணற்ற செயலிகள் உள்ளது. இந்தியாவில் முதன்முறையாக யுபிஐ சேவை வசதி 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி அன்று டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி தொடங்கப்பட்டது.

இந்நிலையில் யுபிஐ மூலம் பணம் பரிவர்த்தனைகளை கணக்கெடுக்கப்பட்டது. அந்த வகையில் கடந்த செப்டம்பர் மாதம் யுபிஐ மூலம் 678  கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது அவை 7.7சதவீதமாக அதிகரித்துள்ளது.

தற்போது ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ 12.11 லட்சம் கோடி மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் மற்றும் யுபிஐ  மூலம் 730கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

author avatar
Parthipan K