கோலி பேக் பீல்டிங் சர்ச்சை விவகாரம்… புகார் கொடுத்தவர் மீதே நடவடிக்கையா?

0
166

கோலி பேக் பீல்டிங் சர்ச்சை விவகாரம்… புகார் கொடுத்தவர் மீதே நடவடிக்கையா?

நேற்றைய போட்டியில் வங்கதேச விக்கெட் கீப்பர்-பேட்டர் நூருல் ஹசன் விராட் கோலி “பேக் ஃபீல்டிங்” என்று குற்றம் சாட்டினார், இது கள நடுவர்களால் கவனிக்கப்படாமல் போனது மற்றும் அவர்களின் டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் அவரது அணிக்கு முக்கியமான ஐந்து பெனால்டி ரன்களைக் கிடைக்காமல் செய்தது.

இதையடுத்து இந்த  விவகாரம் சர்ச்சையக் கிளப்பியது. ஆனால் கோலி, போலியாக பந்தை த்ரோ செய்வது போல சைகை செய்தார். ஆனால் இதை இரண்டு பேட்ஸ்மேன்களுமே கவனிக்கவில்லை. அதனால் கோலியின் இந்த சைகை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அதுபோல நடுவர்களும் அதைக் கவனிக்கவில்லை. இதனால் போட்டியிலோ வீரர்களிடமோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

ஆனால் இது சம்மந்தமாக கள நடுவர்களிடம் புகார் அளிக்காமலேயே நடுவர்களை குற்றம் சாட்டி பங்களாதேஷ் வீரர் நூருல் இஸ்லாம் பேசியதால், இப்போது அவர் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக கோலி நோ பால் கேட்டு, அதன் பிறகு நடுவர் நோ பால் கொடுத்த போதும் வங்கதேச கேப்டன் ஷகீப் அல் ஹசன் நடுவர்களிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர் கோலி விளக்கம் அளித்ததும் அவர் சமாதானம் ஆனார். இது சம்மந்தமான வீடியோவும் இணையத்தில் வைரல் ஆனது. நேற்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருதை கோலி வென்ற நிலையில் இரண்டு சர்ச்சைகளில் சிக்கிக்கொண்டார்.

Previous articleபைனல் செய்யப்பட்ட இந்தியன் 2 படத்தின் புதிய பட்ஜெட் இதுதான்!
Next articleஇந்த ராசிக்காரர்கள் இன்று எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள்!