வடகடக்கு பருவமழையின் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக செய்த கனமழை காரணமாக வடசென்னை பகுதி முற்றிலுமாக பாதிக்கப்பட்டது இதனை தொடர்ந்து சென்னை திருவிக நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆடு தொட்டி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மதிய உணவு வழங்கினார். இதனை அடுத்து பத்திரிக்கையாளர்களிடம் பேசியவர் தமிழகத்தில் பெய்த மழையின் காரணமாக மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டிருப்பாக தெரிவித்திருக்கிறார்.
வெறும் வாய்ச்சொல் வீரர்களாக விளம்பர பிரியராக முதலமைச்சர் செயல் பட்டு வருகிறார் என்று முதல்வரை அவர் விமர்சனம் செய்தார் அதோடு கன்னித்தீவாக கொளத்தூர் தொகுதி இருப்பதாக கூறினார். ஒரு முதல்வரின் தொகுதியே இப்படி இருக்கிறது என்று தெரிவித்த அவர், கொளத்தூர் இல்லை. குளம் ஊர் என்று தான் இருக்கிறது எனவும் குற்றம் சுமத்தினார்.
திமுக அரசின் பிடியிலிருந்து எப்பொழுது விடுதலை கிடைக்கும் என்று தமிழக மக்கள் எதிர்பார்த்து இருப்பதாகவும் தெரிவித்தார் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக எதுவுமே செய்யவில்லை எனவும் இரண்டு நாள் மழைக்கே திமுக கதறுகிறது என்று கூறினார்.
சென்னையில் தண்ணீர் ஓரளவு வெற்றி இருப்பதற்கு காரணமே அதிமுக ஆட்சி காலத்தில் எடுத்த நடவடிக்கைதான் என்றும் மடையால் உயிரிழந்தவர்கள் காயமடைந்தவர்களுக்கு திமுக அரசு எந்த விதமான சரியான உதவிகளையும் செய்யவில்லை என்று குற்றம் சுமத்தினார்.
மழைநீர் வடிகால் பணிகளை நிறைவேற்றி விட்டதாக முதலமைச்சர் தெரிவித்திருப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார் 2000 கிலோ மீட்டர் மழை நீர் வடிகால்வாய் பணியை பாதிக்கும் மேல் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டதாகவும் மீதிப் பணியை தான் திமுக நிறைவேற்றி இருக்கிறது என்றும் அவர் கூறினார்.
மழை நீர் வடிகால் திட்டங்களை தி மு க அரசு நிறைவேற்றியதை போல அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் சேகர் பாபு முதல்வருக்கு சிங்சாங் அடித்துக்கொண்டு திருப்திப்படுத்த பேசி வருவதாக தெரிவித்தார்.
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் அதிநவீன கருவிகள் கொண்டு தூர்வாரப்பட்டதாகவும், மழைக்காலத்தில் இலவசமாக உணவு வழங்கப்பட்டது எனவும் திமுக ஆட்சியில் இலவசமாக உணவுகள் வழங்கப்பட்டதா? என்றும் கேள்வி எழுப்பினார்.
கடந்த பத்து வருடங்களில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை திமுக அரசு காப்பாற்றி இருக்கிறது எனவும் சிங்கார சென்னையை வாந்தி, பேதி, டெங்கு, மர்ம காய்ச்சல் என்ற நிலைக்குத் தான் 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் வைத்திருந்ததாக விமர்சனம் செய்தார்.
மிக விரைவில் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டசபை தேர்தலும் நிச்சயமாக வரும் அதில் அதிமுக வெற்றி பெறும் என்றும் ஜெயக்குமார் உறுதியாக தெரிவித்தார்.