நாளை முதல் பாலின் விலை அதிகரிப்பு! ஆவின் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!

0
157
Milk price increase from tomorrow! The announcement made by the management of Aa!
Milk price increase from tomorrow! The announcement made by the management of Aa!

நாளை முதல் பாலின் விலை அதிகரிப்பு! ஆவின் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு!

ஆவின் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் ஆவின் நிறுவனம் கிராம அளவில் 9,354 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் ,மாவட்ட அளவில் 27பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்கள் ,மாநில அளவில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் என்று மூன்று கட்டமைப்பில் செயல்பட்டு வருகின்றது.

மேலும் ஆவின் நிறுவனம் மூலம் தினந்தோறும் சராசரியாக 40லட்சம் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.நாளொன்றுக்கு தமிழகம் முழுவதும் சுமார் 30 லட்சம் லிட்டர் பால் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 2019 முதல் பசும்பால் கொள்முதல் விலை லிட்டர்க்கு ரூ 32 ஆகவும் ,எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ 41ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் நுகர்வோரின் நலன் கருதி கடந்த ஆண்டு மே மாதம் முதல் அனைத்து பால் வகைகளுக்கான விற்பனை விலையினை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

பால் கூட்டுறவு அமைப்புகளின் முக்கிய நோக்கம் பால் உற்பத்தியாளர்களுக்கு நியாயமான கொள்முதல் விலையையும் ,பால் நுகர்வோர்களுக்கு தரமான பாலை நியாயமான விலையில் விற்பனை செய்யப்படும்.இந்நிலையில் இடுபொருட்கள் விலை அதிகரித்துள்ளது,உற்பத்தி செலவினம் ஆகியவை கூடியுள்ளது ,பால் உற்பத்தியாளர்கள் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரிக்கை விடுத்தனர்.

அதன் அடிப்படையில் பால் உற்பத்தியாளர்களின் நியமான கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்ந்தப்பட்டு ரூ 32ல்லிருந்து ரூ 35 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.மேலும் எருமைப்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் உயர்த்தி ரூ 41ல்லிருந்து ரூ 44 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ள விலைகளில் நவம்பர் ஐந்தாம் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கொள்முதல் விலை உயர்வால் சுமார் நான்கு லட்சம் பால் உற்பத்தியாளர்கள் நேரடியாக பயனடைவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleதென் மாவட்டங்களில் சிக்கலா? எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அதிரடி வியூகம்! பன்னீர்செல்வம் தரப்பு அதீத அமைதி என்ன நடக்கிறது அதிமுகவில்?
Next articleமீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை! வெளியான அதிரடி அறிவிப்பு