திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு! நவம்பர் 8 தேதி அனைத்து தரிசனமும் ரத்து!
கடந்த அக்டோபர் 28ஆம் தேதி திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் திருப்பதி தேவஸ்தானத்தில் இலவச தரிசனத்திற்கு செல்லும் சாதாரணப் பக்கதர்களுக்கு தேதி மற்றும் நேரம் குறிப்பிட்ட டைம் ஸ்லாட் தரிசன டோகன்கள் கடந்த ஒன்றாம் தேதியில் இருந்து மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்நிலையில் வரும் 8ஆம் தேதி அன்று விஐபி தரிசனம்,ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு விஐபி தரிசனம் ரூ 300 கட்டண தரிசனம் நேர ஒதுக்கீடு செய்யப்படும் இலவச தரிசன டிக்கெட் ,கல்யாண உற்சவம் ,ஊஞ்சல் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்கள் ,மாற்று திறனாளிகள் மற்றும் கைக்குழந்தைகளுடன் உள்ள பெற்றோர் ,வெளிநாட்டு இந்தியர்கள் ,பாதுகாப்பு பணியாளர்கள் உளிட்ட அனைத்து சலுகை பெற்ற தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் வரும் 8ஆம் தேதி பிற்பகல் 2.39 மணி முதல் மாலை 6.19 வரை சந்திர கிரகணம் நடைபெறுகின்றது.அதனால் திருப்பதி ஏழுமலையான் கோவில் காலை 8.40 மணிக்கு மூடப்படும் இரவு 7.20 மணிக்கு தான் திறக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 11மணி நேரம் கோவில் மூடப்படுகிறது.
மேலும் கிரகண நாட்களில் கிரகணம் முடியும் வரை சமையல் செய்ய மாட்டார்கள் அதனால் அன்னபிரசாதம் வழங்கப்பாடாது அதனால் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் அதற்கு ஏற்றவாறு தயாராகி வருமாறு தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.