இனி ரேசன் கார்டு இல்லாமலே பொருட்கள் வழங்கப்படும்! அமைச்சர் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி
வயது மூப்பு மற்றும் விரல் ரேகை பதிவு செய்ய இயலாத நிலையில் கண் கருவிழியைச் சரிபார்க்கும் முறை மூலம் நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் வழங்குவது மகாராஷ்டிரம், அஸ்ஸாம், தெலுங்கானா உத்தரபிரேதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் தற்போது செயல்பாட்டில் இருந்து வருகிறது.
அதேபோல், தமிழகத்திலும் இந்த செயல் பாட்டை கொண்டு வரும் வகையில் ஒரு ஊரகப் பகுதியிலும் ஒரு நகரப் பகுதியிலும் செயல்படுத்தப்படும். என்று முன்னரே கூறப்பட்டு இருந்தது.
பல நாட்கள் ஆக விரல் ரேகை பதிவு சரிபார்த்தலில் சிக்கல் ஏற்படுவதாக தொடர்ந்து குற்றசாட்டு வந்த வண்ணம் உள்ளன. எனவே இந்த கருவிழி பதிவு மூலம் ரேசன் பொருள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் சங்கரபாணி கருவிழியை ஸ்கேன் செய்து பொருட்கள் வங்கி கொள்ளலாம் என்றும் இனி ரேசன் கடைக்கு செல்லும் போது ரேஷன் கார்டு எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த முறை விரைவில் நடைமுறை படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். மேலும் தற்போது சோதனை முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.