வடிவேலுவை வில்லனாக நடிக்க வைக்க முயற்சி செய்யும் இயக்குனர்…! ஜி வி பிரகாஷ்குக்கு லக் அடிக்குமா?

0
309

வடிவேலுவை வில்லனாக நடிக்க வைக்க முயற்சி செய்யும் இயக்குனர்…! ஜி வி பிரகாஷ்குக்கு லக் அடிக்குமா?

ஜி வி பிரகாஷ் நடிக்க உள்ள திரைப்படத்தில் வடிவேலுவை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பல வருட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ். இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாக பிரச்சனையால் நடிகர் வடிவேலுக்கு ரெட் கார்டு தடை விதிக்கப்பட்டது. அதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை.

பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு விதிக்கப்பட்டிருந்த ரெட் கார்டு தடையை சமீபத்தில் தான் நீக்கியது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். இந்நிலையில் தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் தவிர இப்போது சந்திரமுகி 2, மாமன்னன் ஆகிய படங்களில் நகைச்சுவை வேடங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் முதல் முறையாக வடிவேலுவை வில்லன் வேடத்தில் நடிக்க வைக்க லொள்ளு சபா இயக்குனர் ராம்பாலா முயற்சி செய்து வருகிறாராம். ஜி வி பிரகாஷ் நடிக்கும் நகைச்சுவை படத்தை ராம்பாலா இயக்க உள்ளார். இந்த படத்தில் வில்லனாக நடிக்க வைக்க வடிவேலுவிடம்  பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த வேடத்தில் வடிவேலு நடிக்க ஒத்துக்கொண்டால் முதல் முதலாக ஒரு வில்லன் வேடத்தில் வடிவேலு தன்னுடைய திரைவாழ்க்கையில் நடிக்கும் பாத்திரமாக அமையும்.

Previous articleரஜினி நடிப்பில் ஐஸ்வர்யா இயக்கும் ‘லால் சலாம்’… பிரபல ஹீரோக்களுக்கு அடித்த ஜாக்பாட்!
Next articleஅனிருத் குரலில் விரைவில் வருது துணிவு முதல் சிங்கிள்… ஜிப்ரான் வெளியிட்ட அப்டேட்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here