அனிருத் குரலில் விரைவில் வருது துணிவு முதல் சிங்கிள்… ஜிப்ரான் வெளியிட்ட அப்டேட்!
அஜித் நடித்து வரும் துணிவு படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
அஜித் நடித்துவரும் துணிவு திரைப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. இந்த படத்தின் டப்பிங் மற்றும் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அஜித் சமீபத்தில் டப்பிங் பேசும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகின. வலிமை படத்துக்கு சிறப்பாக பின்னணி இசை அமைத்த ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைத்து வருகிறார்.
நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை ஆகிய படங்களின் வெற்றிக்குப் பிறகு H வினோத் இயக்கத்தில் அஜித் தனது 61வது நடித்தது வருகிறார். H வினோத்துடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள துணிவு படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. துணிவு திரைப்படம் தமிழ்நாட்டில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தால் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் இப்போது துணிவு படத்தின் முதல் சிங்கிள் பாடல் அப்டேட்டை ஜிப்ரான் வெளியிட்டுள்ளார். பாடல் ஆசிரியர் வைசாக் எழுதியுள்ள சில்லா சில்லா என்ற பாடலை இசையமைப்பாளர் அனிருத்தை பாட வைத்துள்ளார் ஜிப்ரான். இது சம்மந்தமான புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஜிப்ரான் விரைவில் துணிவு முதல் சிங்கிள் வெளியாகும் என அறிவித்துள்ளார்.
வாரிசு முதல் சிங்கிள் வெளியாவது விஜய் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அஜித் ரசிகர்களுக்கு ஜிப்ரானின் இந்த அப்டேட் உற்சாகமான செய்தியாக அமைந்துள்ளது.