எடப்பாடியின் கோட்டையை தகர்க்க பன்னீர்செல்வம் தரப்பு போடும் அதிரடி திட்டம்! டிசம்பரில் ஆட்டம் காணவிருக்கும் கொங்கு மண்டலம்!

0
194

[0:48 am, 05/11/2022] Lover Of Love: பெரியகுளம் அருகே உள்ள கைலாசபுரம் பண்ணை வீட்டில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லப்படும் பன்னீர்செல்வத்தை கோவை புறநகர் மாவட்ட செயலாளர் கோவை செல்வராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் சந்தித்தனர் இவர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் என்பது குறிப்பிடத்தக்கது இந்த சூழ்நிலையில் பன்னீர் செல்வத்திற்கு சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்து பெற்றனர் அதன் பிறகு நிர்வாகிகள் எல்லோரையும் பன்னீர்செல்வம் வரவேற்று பேசினார்.

அதன் பிறகு பேசிய கோவை செல்வராஜ் அதிமுகவின் தொண்டர்கள் முன்பக்கம் இருக்கிறார்கள் இன்னும் பல பேர் வர இருக்கிறார்கள் ஆனால் சில நெருக்கடிகளால் அந்த பக்கம் தவிர்த்துக் கொண்டிருக்கிறார்கள் நம்முடைய கூட்டத்தை பார்த்து ஒட்டுமொத்த தொண்டர்களும் நிர்வாகிகளும் நம்முடைய பக்கம் வருவார்கள் அதோடு தற்போது வந்தால் தான் கட்சியில் அண்ணனுடன் இருக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

இதற்குப் பின்னர் வருபவர்கள் தங்களுக்கு பிறகு தான் என்பதை மறந்து விட வேண்டாம். ஒவ்வொரு ஒன்றியமாக, மாநகரமாக, மாவட்டமாக, செயல்வீரர்கள் கூட்டம் நடத்தப்படும். வரும் டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் கோவை சாஸ்திரி மைதானத்தில் 5 ஆயிரம் பேரை ஒன்று திரட்டி முதல் செயல் வீரர்கள் கூட்டம் பன்னீர்செல்வம் வழிகாட்டுதலின் படி மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்படும் என்று கூறினார்.

இதன் மூலமாக எடப்பாடி பழனிச்சாமியின் கோட்டையான கொங்கு மண்டலத்தை ஆட்டம் காண செய்யப் போவதாகவும், அடுத்தடுத்து திட்டங்களை செயல்படுத்த இருப்பதாகவும் பன்னீர்செல்வம் தரப்பு பேசி வருகிறது. இதன் பிறகு பேசிய பன்னீர்செல்வம் சுயநலத்திற்காக ஒரு சிலர் கட்சி விதிகளை திருத்தம் செய்கிறார்கள். தொண்டர்கள் கூட கட்சி தலைமை பதவிக்கு வரலாம் என்ற எண்ணத்தில் எம்ஜிஆர் விதிகளை உருவாக்கினார் என்று தெரிவித்துள்ளார்.

ஆகவே தான் பன்னீர்செல்வம் முதல்வராகவும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகவும் அறம் அடைந்தது பன்னீர்செல்வம் கட்சியின் விருந்தினைப்பாளராகவும் எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் வரமடைந்தது இத்தகைய விதிகளை யாரும் திருத்தக் கூடாது. கட்சி தலைமை பொறுப்பிற்கு போட்டியிட 10 மாவட்ட செயலாளர்கள் முன் மொழிய வேண்டும், வழிமொழிய வேண்டும். அவர் 5 ஆண்டு காலம் கட்சியின் தலைமை கழக உறுப்பினராக இருந்திருக்க வேண்டும் என்று சொன்னால் மிட்டா மிராசுதாரர்கள் மட்டுமே தலைமை பொறுப்பிற்கு வரக்கூடிய நிலை ஏற்படும் என்று தெரிவித்தார்.

அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். சரியான பாதையில் சென்றால் தான் ஊர் வந்து சேர முடியும் என்பதை போல ஒற்றுமையாக செயல்பட்டு தமிழக மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார்.

Previous articleஅடிலைட் மைதானத்தில் அதிரடி காட்டும் விராட் கோலி! அடிக்கப் போகும் அதிர்ஷ்டம்?
Next articleஐயோ போச்சி கலவரம் பண்ண பாக்குறாங்க! ஆர் எஸ் எஸ் அமைப்பால் கதறும் தமிழக அரசு!