வந்தியத்தேவனுக்கு பிறகு எம்ஜிஆர் – ஆக கார்த்திக் எடுக்கவிருக்கும் புது அவதாரம்!

வந்தியத்தேவனுக்கு பிறகு எம்ஜிஆர் – ஆக கார்த்திக் எடுக்கவிருக்கும் புது அவதாரம்!

தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமானவர் நடிகர் கார்த்திக். இவரது படங்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக வெளிவந்து கோடி கணக்கில் வசூல் செய்து வருகிறது. இவரும் மிகச்சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவருடைய நடிப்பில் அடுத்து வரவிருக்கும் படத்திற்கும் மக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகம் இருந்து வருகிறது. இவருடைய நடிப்பில் கடந்த சில தினத்திற்கு முன்பு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற பொன்னியின் செல்வன் படத்தில் இவரின் வந்தியத்தேவன் கதாபாத்திரம் அனைவரையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த சர்தார் திரைப்படமும் கோடி கணக்கில் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து நடிகர் கார்த்திக் சூது கவ்வும் படத்தின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த இயக்குனர் நலன்குமாரசாமி இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.  இந்த கதையும் சற்று வித்தியாசமாகத்தான் உள்ளது என்கிறார்கள். இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் கார்த்திக் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி அரசியலிலும் பெரும் ஜாம்பவனாக இருந்தவர் மக்கள் திலகம் என்னும் புகழ் பெற்றவர் எம்.ஜி.ஆர். இவர் மக்களுக்காக ஏராளமான நல்ல விஷயங்களை செய்தவர். அதனால் தான் அவர் இன்றளவும் மக்கள் மனதில் நீங்காமல் இடம் பிடித்து நிலைத்து இருக்கிறார்.

அப்படி ஒரு பெருந்தலைவர் கதாபாத்திரத்தில் தான் கார்த்திக் நடித்து வருகிறார். இந்த படத்தின் கதையானது  ஒரு சாதாரண மனிதன் ஸ்பிலிட் பர்சனாலிட்டி பிரச்சனையால் எம்ஜிஆர் ஆக மாறிவிடுகிறார். தன்னையும் எம்ஜிஆர் ஆக நினைக்கும் அந்த மனிதன் பொது மக்களுக்கு நிறைய நல்ல விஷயங்களையும் செய்கின்றார் இதுதான் படத்தின் கதை என்கிறார்கள்.

சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவனாக வலம் வந்து நம்மை கவர்ந்த நடிகர் கார்த்திக் அடுத்து எம்ஜிஆராக அவதாரம் எடுப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment