தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் நடந்த மெகா முறைகேடு! 365 கோடி ரூபாய் அபேஸ்

0
177

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் நடந்த மெகா முறைகேடு! 365 கோடி ரூபாய் அபேஸ்

 

தமிழகத்தில் 808 கூட்டுறவு சங்கங்களில் நடைபெற்ற முறைகேடுகளில் சுமார் ரூ.365 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழக கூட்டுறவுச் சங்கங்களை கணினிமயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியிலும் மற்றும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியிலும் மொபைல் பேங்கிங், ஆர்டிஜிஎஸ், நெப்ட் போன்ற வசதிகள் நடைமுறையில் உள்ளன.

 

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் யூபிஐ வசதி அறிமுகப்படுத்தப்பட்டு, கூகுல் பே, பேடிஎம் போன்ற வசதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் ஒரு மாத காலத்தில் இந்த யூபிஐ வசதி அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மாநிலம் முழுவதும் உள்ள 4453 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களையும் கணினி மையமாக்குதல் திட்டத்தின் மூலம் விரிவுபடுத்தபட்டு வருகின்றன .

 

இந்நிலையில் 808 க்கும் மேற்பட்ட சங்கங்களில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டு ரூ.365 கோடிக்கு அதிகமான சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டு, அவற்றை ஏலம் விடுவதற்கான

நடவடிக்கைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

 

நபார்டு வங்கி மூலம் 1 சதவிகித வட்டியில் பெறப்படும் கடன் உதவியை கொண்டு இலாபத்தில் இயங்கும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் முன்பை விட நடப்பு ஆண்டில் 8,438 பணிகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

Previous articleமேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாகும்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
Next articleஇலங்கை கிரிக்கெட் அணியை சேர்ந்த தனுஷ்கா குணதிலகா சிறையில் அடைப்பு