அரசு ஊழியர்களுக்கு இனி சீருடை! கட்டாயம் அணிய வேண்டும் மீறினால் நடவடிக்கை!
அசாம் அரசு தற்போது உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த உத்தரவில் தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் ஜீன்ஸ் ,டி சர்ட் மற்றும் லெக்கின்ஸ் அணிவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் ஆண்களை இனி சட்டை மற்றும் பேண்ட் மட்டுமே அணிய வேண்டும்.பெண்கள் புடவை மற்றும் கள்வர் கமீஸ் அணியலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு புதன்கிழமையும் ஊழியர்கள் பாரம்பரிய ஆடைகளை அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த உத்தரவுகளை சபாநாயகர் பிஸ்வஜித் டைமாரியின் உத்தரவின் பேரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவு தினசரி ஊதியம் மற்றும் மாத ஊதியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பொருந்தும்.மேலும் இந்த உத்தரவை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் சட்டசபை கூட்டத்தொடரில் போது ஊழியர்களுக்கு சீருடை வழங்க உள்ளதாக கூறப்படுகின்றது .அரசு வழிகாட்டுதலின் படி ஆடைகளை அணிய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.