பொல்லார்டுக்கு டாட்டா காட்டப் போகும் மும்பை இந்தியன்ஸ்?… அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக விளங்கி வருபவர் கைரன் பொல்லார்டு.
ஐபிஎல் 2022 இல் மும்பை இந்தியன்ஸ் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கடந்த சீசனில் அந்த அணி கடைசி இடத்தில் நிறைவு செய்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தேவையற்ற வீரர்களுக்காக அதிக பணம் செலவழித்ததாக விமர்சகர்கள் கூறினர்.
இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு முக்கிய முடிவை எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் 10 நாட்களுக்குள் அணிகள் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிடவேண்டும். இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி கைரன் பொல்லார்டை அணியில் இருந்து விடுவிக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்தியன் பிரீமியர் லீக் 2023 (ஐபிஎல்) சீசனுக்கான ஏலம் டிசம்பர் 16 அன்று நடைபெற உள்ளது. மினி ஏலம் பெங்களூருவில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 வீரர்களை மட்டும் தக்கவைத்துக் கொண்டு 12 வீரர்களை விடுவிக்க உள்ளதாம். இதில் பொல்லார்டை விடுவிக்கும் முடிவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்த வீரர்களில் அவரும் ஒருவர்.
மும்பை அணி விடுவிக்க உள்ளதாக சொல்லப்படும் வீரர்கள்
- ஆகாஷ் மத்வால்
- அன்மோல்பிரீத் சிங்
- டைமல் மில்ஸ்
- முருகன் அஸ்வின்
- மயங்க் மார்கண்டே
- சஞ்சய் யாதவ்
- ரமன்தீப் சிங்
- கீரன் பொல்லார்ட்
- ஆர்யன் ஜூயல்
- ராகுல் புத்தி
- ஃபேபியன் ஆலன்
- முகமது அர்ஷத் கான்