நீட் தேர்வு ரத்து? வெளியான திடீர் திருப்பம்!
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு ,முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கும் ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது.நீட் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.இந்த தேர்வுக்கு பதிலாக நெக்ஸ்ட் என்ற பெயரில் பொதுவான தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மேலும் எம்.பி.பி.எஸ் இறுதியாண்டில் பயிலும் மாணவர்கள் இந்த தேர்வை எழுத வேண்டும்.
மேலும் இந்த தேர்வானது பொதுவாக எம்.பி.பி.எஸ் மாணவர்கள் மருத்துவ பணிகள் செய்வதற்கான லைசென்ஸ் பெறுவதற்கும் ,தகுதி அடிப்படையில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு செல்லவும் ,வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவில் அவர்களின் பணியை மேற்கொள்வதற்காகவும் நடத்தப்படுகிறது.
இந்நிலையில் அண்மையில் தேசிய மருத்துவ கமிஷனின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.அந்த கூட்டத்தில் நெக்ஸ்ட் தேர்வை அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டு ,இது குறித்த விருப்பத்தை மத்திய சுகாதார அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த முடிவின்படி அடுத்த ஆண்டு டிசமர் மாதம் நெக்ஸ்ட் தேர்வு நடத்தப்பட்டால் தற்போதைய நீட் தேர்வு அடுத்த ஆண்டுடன் முடிவுக்கு வரும்.மேலும் அடுத்த ஆண்டு நடைபெறும் நெக்ஸ்ட் தேர்வை 2019-20 ஆம் ஆண்டு பிரிவு மருத்துவ மாணவர்கள் எழுத வேண்டும் .இந்த தேர்வில் பெறப்படும் மதிப்பெண் அடிப்படையில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை மாணவர் சேர்க்கை நடைபெறும்.
இந்நிலையில் மத்திய அரசு தற்போது இந்த நெக்ஸ்ட் தேர்வை தேசிய மருத்துவ கல்வி வாரியத்துக்கு பதிலாக எய்ம்ஸ் நிர்வாகம் நடத்தும் என தெரிவித்துள்ளது.மேலும் இது தொடர்பாக இறுதி முடிவுகள் இனிவரும் காலகட்டத்தில் எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.