எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிக்கும் இளைய சமுதாயம்! முன்னாள் அமைச்சர் பெருமிதம்!

0
164

அரசு பணிக்கு தனியார் ஆள் சேர்ப்பு நிறுவனங்களை பயன்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இதற்கு அதிமுக வெளியிட்ட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதனைத் தொடர்ந்து குழுவிற்கு விதிக்கப்பட்ட வரைமுறை ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி நாள்தோறும் தமிழகத்தை ஆளும் அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து நினைவு படுத்தி வருகிறார். அப்படி நினைவுப்படுத்தி வந்தாலும் எந்த விதமான பிரயோஜனமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அவர்களுடைய தேர்தல் வாக்குறுதிகள் இன்று கிணற்றில் வீசப்பட்ட கல்லாக காட்சியளிக்கிறது. குறிப்பாக திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஐந்தரை இலட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்கள். அதோடு தமிழ்நாடு முழுவதும் உள்ள 3 லட்சம் அரசு வேலை வாய்ப்புகளுக்கு இளைஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் வாக்குறுதி எண் 187ல் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் புதிதாக சற்றேற குறைய 2 லட்சம் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் எனவும் மொத்தம் 5 1/2 லட்சம் வேலை வாய்ப்புகள் இளைஞர்களுக்கு வழங்கப்படும் என பொய்யான வாக்குறுதிகளை வழங்கினார். ஆனால் திமுகவின் வாக்குறுதிகள் அனைத்தும் கிணற்றில் போடப்பட்ட கல்லாக இருக்கிறது. இன்று சமூகநீதிக்கு ஒரு பேராபத்து வரக்கூடிய நிலையில் தமிழகத்திலே இன்று 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு பேராதத்து வரக்கூடிய அரசாணை எண் 115 ஐ முதல் முதலாக சட்டசபையின் எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டிலேயே முதல் உரிமை குரலாக அரசாங்க எண் 115 ரத்து செய்ய வேண்டும்.

பாடுபட்டு கல்வி பயின்று, கனவு நினைவாகின்ற விதத்தில் வாழ் நாளெல்லாம் தன்னுடைய அர்ப்பணிப்பு உணர்வோடு கல்வி அறிவு பெற்று எப்படியாவது தன்னுடைய குடும்பத்தில் ஒரு அரசு பணியை பெற்று விட வேண்டும் என்று இளைஞர்களுடைய கனவை தெரிவித்து கடுமையான குற்றச்சாட்டுகளை எடுத்து வைத்து மக்களுக்கு விழிப்புணர்வை உண்டாக்கியதோடு மட்டுமல்லாமல் இதனுடைய பேராபத்தை இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்வதுடன் இந்த அரசினுடைய நடவடிக்கைக்கு சுட்டிக்காட்டி உள்ளார் என கூறியுள்ளார் ஆர்பி உதயகுமார்.

தமிழக அரசு பணியாளர்கள் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வாணையம், காவலர் தேர்வு வாரியம் உள்ளிட்ட அரசு தேர்வாணையங்கள் மூலமாக தான் நாம் இளைஞர்களை தேர்வு செய்து அரசு பணியில் நியமனம் செய்கிறோம். ஆனால் இந்த ஆள்சேர்ப்பு நடவடிக்கையை தனியார் ஆள் சேர்ப்பு நிறுவனங்களை பயன்படுத்துவதற்கு முடிவு செய்திருப்பது இந்த அரசாணை எண் 115ன் சாராம்சமாகும்.

அரசு ஊழியர்களின் பணித் திறனை மேம்படுத்தவும் அந்த நோக்கத்துடன் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி முறையில் மாற்றங்களை மேம்படுத்துவோம் என்று சொல்வது அரசின் மேல் போக்கான வார்த்தைகளாக இருக்கிறது. இந்த 115 அரசாணை பசுத்தோல் போர்த்திய புலியாகும் பார்ப்பதற்கு பசுவாகவும், ஆனால் போலியாக இருக்கக்கூடிய இந்த வாய்ப்பை தான் நாம் பார்க்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

6 மாத காலத்தில் இந்த சீர்திருத்த குழு அரசிடம் அறிக்கை சமர்ப்பித்து நடைமுறைப்படுத்தப்பட்டால் இளைய சமுதாயத்தின் எதிர்காலம் இருளில் மூழ்கும் அபாயம் இருக்கிறது. இளைய சமுதாயத்தின் அரசு பணி என்ற கனவு காணாமல் போகும். இனி அரசு பணியாளர் என்ற ஒரு நிலையே தமிழகத்தில் இல்லை என்ற ஒரு நிலை ஏற்படுகின்ற ஒரு பேராபத்து இளைய சமுதாயத்தை சூழ்ந்து இருக்கிறது. இளைய சமுதாயம் விழித்துக் கொள்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இளைஞர்கள் எதிர்காலத்திற்காக, நன்மைக்காக, பாதுகாப்புக்காக உரிமை குரல் கொடுத்தார்.

அந்த ஆய்வு வரம்புகள் ரத்து செய்யப்பட்டு புதிதாக வெளியிடப்படும் என அரசு அறிவித்திருப்பது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எடுத்த அந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று இளைய சமுதாயம் எடப்பாடியாருக்கு சமுதாயத்தின் சார்பில் கோடான கோடி நன்றியை தெரிவித்து வருகின்றனர். வெளியாக வெளிவந்த அரசாணை 115 தடுத்து நிறுத்தி இளைஞர்களை காத்தவர எடப்பாடி பழனிச்சாமி என்று ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Previous articleடி20 உலக கோப்பை 2வது அரையிறுதி போட்டி! இந்தியா இங்கிலாந்து அணிகள் இன்று பல பரிட்சை!
Next articleதிடீரென ராஜினாமா கடிதம் வழங்கிய முக்கிய ஐஏஎஸ் அதிகாரி! சேரப் போறாராமே!